கரிசல்காட்டில்_மத_நல்லிணக்கம்மத_
ஒற்றுமைக்கு_ஒரு_திருவிழா..!


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் வானம் பார்த்த கரிசல் கந்தக பூமி,வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு வழிபாட்டு ஸ்தலமாகும்.
வைப்பார் செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹாவில் முதல் மரியாதை இந்துக்களான நாயக்கர் சமுதாய மக்களுக்கே. சந்தனக்கூடு கொடியேற்றம் தொடங்கி கொடியிறக்கம் வரை அவர்களுக்கே முன்னுரிமை.
இதே போல் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பிள்ளையார்குளம் கிராமத்தில் அரைக்காசு அம்மன் திருவிழாவை தேவர் சமுதாயப் பெருமக்கள் இன்றும் தங்கள் விழாவாகவே கொண்டாடி வருகின்றனர்..
மதத்தை மனதிற்குள் வைத்துமனிதநேயம் போற்றுவோம்.