கேரள அரசு 20ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்குகிறது

முல்லை பெரியாறு விவகாரத்தில் கடந்த 2000 என்று நினைக்கிறேன், கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு வழங்கிய மின்சாரம் நிறுத்தப்பட்டது, 20 ஆண்டுகளுக்கு பின் பெரியாறு அணைக்கு கேரளா வல்லகடவிலிருந்து கேரள மின்வாரியம் மின் இணைப்பை வழங்க இருக்கின்றது. கேரள அரசு இந்த மின் இணைப்பை துண்டித்ததற்கு யானைகள் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கிறது என்ற கருத்தை அன்றைக்கு சொன்னது, இதுவரை அந்த பகுதியிலுள்ள விருந்தினர் மாளிகை, குடியிருப்பு பகுதிகள், அணை ஷட்டர்கள் பயன்படுத்தப்பட்டது. இது குறித்தான வழக்கும் கேரள உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அந்த அடிப்படையில் 1.65 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கிய பின் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந் தேதியிலிருந்து மின் இணைப்பை 20 ஆண்டுகளுக்கு பின் கேரள அரசு பெரியாறு அணைக்கு வழங்க இருக்கிறது.