நீதித் துறையில் சிலப் பிரச்சினைகள்

0

மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, அதன் விளைவாக வழக்குகளும், நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டும் மக்களுக்கு விரைவில் தீர்வுகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஹேப்பியஸ் கார்பஸ் மனுக்கள் நடைமுளை சிக்கல்களினால் விரைவில் தீர்வு காண இயலவில்லை. குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் பலரின் வழக்குகள் தண்டனைக் காலம் முடிந்தவுடன் விசாரணைக்கு வருகின்ற அவலநிலை இருக்கிறது. சித்ராதேவி என்ற விதவை, தன்னுடைய கணவர் விபத்தில் இறந்ததால் நஷ்ட ஈடு கிடைக்க 1974இல் வழக்கு தாக்கல் செய்தும் தீர்வும் கிடைக்காமல், ஒரு வழக்கு நீண்ட காலமாக நிலுவையிலுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிப்படுத்தியது. 30 ஆண்டுகளாகியும்கூட வழக்குகள் பைசலாகாமல் இருக்கும் வழக்குகள் பல, அங்கொன்று இங்கொன்றுமாக இந்தியாவில் இருக்கிறது.

தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் 41,000 வழக்குகள் தேங்கி கிடக்கிறது. பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 58,00,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழ் நீதிமன்றங்களில் 26.3 மில்லியன் வழக்குகள் விசாரணை செய்யாமல் குவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 4,06,958 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில்தான் வழக்குகள் அதிகமாக நடத்தாமல் பெருகியுள்ளன. வழக்கு மன்றங்களின் பணிகளை குறைக்க வழக்கின் வாதிகள், பிரதிவாதிகள் நீதிமன்றங்களின் பணிகளை சுமூகமாக தீர்க்க லோக் அதாலத் என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது விளைவாக தீர்வுகள் மிக விரைவில் கிடைக்கின்றன. 1957 சட்டத்தின் பிரகாரம் இந்ல லோக் அதாலத் நடைமுறைக்கு வந்தது. இதுபோல் தீர்ப்பாயங்களும் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களும் மக்களுக்கு பரிகாரம் கிடைக்கின்ற அமைப்புகளாக திகழ்கின்றன.

கொலை வழக்கு நடத்த பல மாதங்கள் ஆகின்றன. சாட்சியங்கள் இல்லை என்று தேதி மாற்றப்பட்டு வழக்குகள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகின்றன. வழக்குகளின் தாமதத்தை அறிய நீதிபதி ஒருவர் தலைமையில் ஒரு குழு உச்சநீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தன்னுடைய அறிக்கையில், கால தாமதத்தை நீக்க விரைவு நீதிமன்றங்கள், நீதிபதிகள் நியனம் என பல பரிந்துரைகளை வழங்கியது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர். கண்ணா, 1950ஆம் ஆண்டு தான் பெரோஸ்பூர் மாவட்ட நீதிபதியாக இருந்தபொழுது குற்றவியல் வழக்குகளான கொலை வழக்குகளை இரண்டு மாதங்களில் முடித்ததாகக் கூறியுள்ளார். இந்தக் கொலை வழக்கிற்குச் சாட்சியங்கள் வரவில்லை என்று ஒத்தி வைக்கப்படவில்லை. அதை போன்று சென்னை நீதிமன்றத்திலும் ஒரு மாதத்தில் ஒரு கொலை வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மாதத்தில் ஒரு கொலை வழக்கை விசாரித்து திர்ப்பு வழங்கப்பட்டது. விரைவு நீதிமன்றங்களும், சமீபத்தில் துவங்கப்பட்ட மாலை நீதிமன்றங்கள் 6 மணிக்கு துவங்கி இரவு 8 மணி வரை பணிசெய்து விசாரணைகளை முடிக்கின்றன. மாலை நேர நீதிமன்றங்கள் தமிழகத்தில் 11 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்கள் ஒரு மாத சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படும்.

நீதிமன்றக் கால தாமதத்திற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் வழக்கு மன்றத்தில் வாதங்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாகும். பிரெஞ்சு நாட்டிலுள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவைக் கொடுத்து வாதத்தை முடிப்பதுவோல் நமது நீதித்துறையிலும் இம்மாரியான நடைமுறைகளை கொண்டு வரவேண்டும். வழக்குகறை விசாரிக்கும்போது நடைமுறையிலுள்ள சமூகக் கண்ணோட்டத்துடனும், அதில் ஏற்படும் பிரச்சினைகளைக் கொண்டும் தீர்ப்பு வழங்க வேண்டும். இன்றைக்கு வழக்கு வைக்கப்படும்போது அதனால் அதிகமான நேரமும் ஏற்படுகிறது. உதாரணமாக உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்புக்கு சட்ட சிக்கல்களினால் இரண்டு விதமான தீர்ப்புகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்பொழுது வழக்கறிஞர்கள் வாதங்களால் அந்த தீர்ப்புகளின் நோக்கமும் மாறுபடுகிறது.

வழக்கறிஞர்கள் ஒரு வழக்கை தாக்கல் செய்துவிட்டு, வழக்கை ஒத்தி வைக்க தேவையற்ற வகையில் அவகாசம் கேட்பது நேரத்தை பாழ்படுத்துவதற்கு ஒப்பாகும். சாட்சிகள் வரவில்லை என தொடர்ந்து வழக்கை ஒத்திவைப்பது என்ற முறைக்கு முடிவு கட்டவேண்டும்.

கால தாமதத்திற்கு அரசாங்கமும், அரசு வழக்கறிஞர்களும், பல நேரங்களில் காரணமாக இருக்கின்றனர். அரசு அதிகாரிகளும், அரசு சார்பில் வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பதில் மனுக்களை தயார் செய்வதில் அரசு வழக்கறிஞர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. உதாரணமாக, ரிட் மனுவில் பதில் மனுவை உடனடியாக தாக்கல் செய்யாமல் இருப்பதால், பல பிரச்சினைகளுக்கு நியாயம் கிடைக்காத சூழ்நிலைõயும் ஏற்படுகிறது. தீர்வு எளிதில் கிடைக்காமல் மக்கள் அசச்ப்படுகின்றனர்.

நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், பழைய அளவில் இருக்கினற காரணத்தால் தற்பொழுது அதிகரித்து வரும் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளால் இயலவில்லை. நீதிமன்ற நிர்வாகத்தை இன்றைக்குள்ள அறிவியல் மற்றும் சமூகச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். வழக்கு மன்றங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேள்டும். நீதிபதிகள் அரசியல் தலைவர்கள் போன்று விளம்பர பிரியர்களாக இருக்கக் கூடாது. துலாக்கோல் நிலையில் நீதியைப் பரிபாலனம் செய்ய வேண்டும்.

வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தத்தால் வழக்குகள் தேக்கம் அடைகின்றன. 1980ஆம் ஆண்டு டில்லியில் வழக்கறிஞர்கள், சார்பு நீதிமன்ற்ங்களில் ஆறு மாத காலம் வேலை நிறுத்தம் செய்தனர். அப்பொழுது பிரச்சினைகளை அறிந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து மக்களும் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டு. இன்றைக்கு நீதிமங்களைப் பற்றித் தவறான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தற்பொழு ஒரு தீபதியிõடம் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் வாதாடினால் வழக்கு வெற்றி பெறலாம் என்ற தப்பான எண்ணங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் 1983இலிருந்து அவ்வப்போது எழுந்து வருகின்றன. நீதிபதி வி.ராமசாமி பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குள்ளாகி சர்ச்சையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு சுற்றுலா நிறுவனத்தோடு இருந்த தொடர்பு குறித்து பிரச்சினைகள் எழுந்தது. மற்றொரு நீதிபதி மீது முல்லா – முகமதிய சட்ட நூல் வெளியிட்டு தொடர்பாக ஆதாயம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக நீதிபதிகள் மைசூர் சென்றபொழுது அவர்கள் கேளிக்கையாக நடந்த முறை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. கன்னியாகுமரியில் ஒரு காற்றாலை நிறுவனர் நடத்திய விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. தேவகவுடா பிரதமராக இருந்தபோது அவரை தலைமை நீதிபதி ஒரு வழக்கு குறித்து சந்தித்தாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. 1983-84இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டன என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. நீதிபதிகளை குறித்து லஞ்சம், தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகள், வீட்டுமனை ஒதுக்கீடுக்காக ஆட்சியாளரிடம் மண்டியிடுவது போன்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

சமீபத்தில் இட ஒதுக்கீடு குறித்து தலைமை நீதிபதி ஆர்.சி.லக்கோட்டி வெளியிட்ட கருத்துகளால் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உச்சநீதிமன்றமும், நாடாளுமன்றமும் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டன. மக்கள் அவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி, சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முறையில் குறிப்பிட்டனர். மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி நீதித்துறை தனது எல்லைகளை விட்டுத் தாண்டக் கூடாது என்று திட்டவட்டமாகவும் கூறியுள்ளார். பண்டித நேரு பிரதமராக இருந்தபோது நில சீர்திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தும்போது உச்சநீதிமன்றம் தெரிவித்த ஆணைகளை எதிர்த்து மகராஷ்டிரத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் நாத்பாய் நாடாளுமன்றத்தில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுளையை கடுமையாக அவையில் சாடினார்.

நீதிமன்றத்தின் ஆணைகளை பல மாநில அரசுகள் கிடப்பில் போடுகின்றன. கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணை, பஞ்சாப் அரசு சட்லெஜ்-யமுனா கால்வாய் குறித்த ஆணைகளை அந்த அரசுகள் சற்றும் மதிக்காமல் நடந்து கொண்டதால் தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தீர்வு ஏற்படவிர்லை. சட்லெஜ் பிரச்சினையில் அரியானா-டில்லி பாதிக்கப்பட்டுள்ளன. டில்லி நகரத்தில் வணிக வளாகங்களில் மூடுவது போன்ற வழக்குகளில் அரசும், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பாலி நீதிமன்ற ஆணைக்கு விரோதமாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை கிளப்பியது. ஒரு கேரள அமைச்சர் பணத்தன் கணத்தை கொண்டே நீதி கிடைக்கிறது என்ற பேச்சு கேரளா உயர்நீதிமன்றம் கடுமையான நடவடிக்கையில் இறங்கி உச்சநீதிமன்றம் மூலமாக மன்னிப்பு கேட்டார் அந்த அமைச்சர். மத்திய அமைச்சர் கபில் சிபல் உத்திரப்பிரதேச முதலமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ் டில்லியை அடுத்து உள்ள நொய்டா பகுதியில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவருக்கு முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கினார் என்ற புகாரை எழுப்பினார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நீதபதி சக்தியதேவ் பிறப்பித்த ஆணையும் பி.எச்.பாண்டியன் பேரவைத் தலைவராக இருந்தபோது நீதிபதி டி.என்.சிங்காரவேலு பிறப்பித்த ஆணையை சட்டமன்றத்தில் ரத்து செய்ததும், நில ஆர்ஜித வழக்கில் சென்நை உயர்நீதிமன்றம் தேவையில்லாமல் இடைக்கால உத்திரவுகளை வழங்குகின்றது என்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களும், அமைச்சர் வீராசாமி சமீபத்தில் நீதித்துறையைப் பற்றி கடுமையாக விமர்சித்தது தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளாகும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழகிரிசாமி அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டபோது அன்றைய சட்ட அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் கருத்துக்களை ஒட்டி, நீதித் துறைக்கும் அரசுக்கும் இடையே பிரச்சினை நடந்தத. இவ்வாறு தமிழக சட்டமன்றத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றத்திள்கும் இடையே அவ்வப்போது பல சமயம் கடுமையான மோதல்களும், விவாதங்களி, போராட்டங்கள் நடந்துள்ளன.

நீதிமன்றங்களில் இடைக்கால நிவாரணங்கள் கொடுக்கும்போது சரியான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு பிரச்சினையில் ஒரு நீதிபதி இடைக்கல நிவாரணங்கள் வழங்குகிறார். ஆனால் அதே பிரச்சினையில் வேறு ஒருவர் வழக்கை தாக்கல் செய்து வேறு நீதிபதியிடம் வரும்பொழுது இடைக்கால நிவாரணங்கள் மறுக்கப்படுகின்ற சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் திசை திருப்பக்கூடிய வகையில் ஆகிவிடும் என்று அச்சம் ஏற்படுகிறது. நீதித்துறை சீசரின் மனைவிபோல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இயங்கவேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் 1960-70களில் இருந்ததைவிட 1980இலிருந்து அதிகமாகிக் கொண்டே வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்குகின்ற ஆணைகளை மதிக்காமல் அதிகாரிகள் நடந்து கொள்வது மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது. இந்தத் தவறான செயல்முறை நிர்வாகத்தின் அமைப்பில் ஒரு புரையோடிய சூழ்நிலையை உருவாக்குகிறது. அவமதிப்பு வழக்குகளில் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பினால், அதில் கவனம் செலுத்தாமல் அரசாங்கம் ஒரு சில சமயங்களில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது.

உச்சநீதிமன்றத்தில் வெறும் அரசியல் சாசன சம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க தனியாக மேல்முறையீடு தலைமை நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும்.

நீதிமன்றத்திற்கு வேண்டிய வசதிகளை உடனுக்குடன் அரசு கவனித்துச் செய்ய வேண்டும். இன்றைக்குத் தமிழகத்தில் பல்வேறு உரிமையியல் நீதிமன்றங்கள் சாதாரண வாடகைக் கட்டடங்களில் அடிப்படை தளவாடக் பொருட்கள் இல்லாத சூழ்நிலையில் செயல்படுகின்றன. நீதித் துறை ஜனநாயகத்தில் முக்கிய அங்கம் என்று நினைத்து அரசு செயல்பட வேண்டும். இலவச சட்ட மய்யங்களும் ஏழை எளியவர்களுக்கு நீதிமன்ற படிகளை ஏற ஓரளவு துணையாக உள்ளது.

சட்டத்தின் ஆட்சி, அடிக்கடை உரிமைகள், மக்கள் நலன், ஆட்சியாளர்களின் கொடுமையால் பாதிப்பு ஏற்படும்பொழுது, அதை எதிர் கொள்ள மக்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடை நீதித்துறை. அத்துறையின் கண்ணியம், கீர்த்தி காக்க உரிய மாற்றங்கள், திருத்தங்கள் இன்றைக்கு அவசியம் தேவை.

– தினமணி, 25.08.2007

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons