பயிரிடும் முறையில் மறுசிந்தனை தேவை

0

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது விவசாயிகள் பாரம்பரியமாக – சம்பா, கார் போன்ற நெல் வகைகளைப் பயிரிட்டு வந்தனர். பழைய மரபு வழியாகப் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் பயிரிடப்படுவதில்லை. பசுமைப் புரட்சி காரணமாகப் புது ஆராய்ச்சி வகைகள் படையெடுக்கத் தொடங்கின. உணவில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டாலும், பசுமைப் புரட்சி மூலமாக ஒரு சில பிரச்சினைகள் விவசாயத்திலும், விவசாய விளை பொருட்கள் நுகர்வேர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பாரம்பரிய நெல் உற்பத்தி செய்யும் செலவும், பராமரிப்புப் பணிகளும், விவசாயிகளுக்கு மிகவும் குறைவு. கடந்த காலங்களில் விவசாயம் மரபு ரீதியாக செய்யும்பொழுது விவசாயிகள் இன்றைக்கு சந்திக்கும் கடன் தொல்லைகளைப் போல், அன்றைக்குள்ள விவசாயிகள் விவசாயத்தினால் சந்திக்கவில்லை. இன்றைக்குப் புதிய நெல் வகைகளை பயிரிட்டால் அதற்குப் பயன்படுத்தப் படுகின்ற இடுபொருட்களான இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளின் விலைகள் அதிகரித்து அதை வாங்கி விவசாயத்தில் பயன்படுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லியோ குறிப்பிட்டக் காலத்தில் பயிர்களுக்கு இட தாமதித்தால் பயிர்களின் வளர்ச்சிக்குப் பாதகமும் ஏற்படும். செயற்கை உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துவதால் இன்று நாம் உண்ணும் உணவு பொருட்களில் இரசாய உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் இரசாயன தன்மை கலந்து விடுகின்ற காரணத்தினால், அதை உட்கொள்ளும் மக்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தாய்பாலிலும் கூட இந்த பூச்சி மருந்து கலந்துள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டில் தான் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று இணிதணஞிடிடூ ணிஞூ Mஞுஞீடிஞிச்டூ கீஞுண்ஞுச்ணூஞிட (ஐஇMகீ) அய்.நா. நிறுவனத்தின் உணவு விவசாய ஆலோசகர் கூறியுள்ளர். இந்த ஐஇMகீ நிறுவனம், சமீபத்தில் கண்ட ஆராய்ச்சிகளின் மூலம் புதிய செயற்கை உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படுத்துகின்ற கேடுகளைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதைப்போல ஜெய்பூர் எஸ்.எப்.எஸ். மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சுப்ராப் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

நவீனப்படுத்தப்படும் இந்திய விவசாயத்தில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் யாவும் ஆகோனா குளோரின் என்ற வகையைச் சார்ந்தது. இது மிகவும் சக்தி வாய்ந்தது. பயிர்களில் அதிக நாள் தங்கக் கூடியது. தற்பொழுது இதை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையைச் சார்ந்த டி.டி.டீ., பி.எச்.பி., என்டிரின், ஆல்டிரின் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் இந்திய விவசாயிகளால் மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இந்த மருந்துகள் தெளிக்கப்பட்ட உணவு தானியங்களிலும், காய்களிலும் இந்த பூச்சிக் கொல்லி இரசாயனத் தன்மை உட்சென்று, அதை மக்கள் உண்ணும்பொழுது உடலில் சேர்ந்து விடுகின்றது. எனவே, புதிய வகை விவசாய விதைகளில் உற்பத்தியாகும் விவசாய உற்பத்தி நுகர்பொருட்களின் மூலம் மனித குலத்திற்குக் கேடு விளைவிக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. முன்னேற்றமடைந்த நாடுகள் பூச்சிக் கொல்லி மருந்தைப் பயன்படுத்தாத தானிய வகைகளையும், காய்கறிகளையும் மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கின்றது. இரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது.

ஆசியாவில் பிலிப்பைன்ஸ் நெல் ஆய்வு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நெல் ரகங்களும் நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எளிதாக பலியாகியுள்ளன என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. 1968-69இல் தென்கிழக்கு ஆசியாவில் ஐ.ஆர்.8 பாக்டீரியாவால் தாக்கப்பட்டது. 1970-71இல் இது டுங்ரோ வைரஸால் தாக்கப்பட்டது. ஆனால் மரபுவழி நெல் பயிர்கள் எளிதாகப் பூச்சிகளால் தாக்கப்படுவதில்லை.

மரபு வழி விவசாயத்தில் பயிர் செய்யப்பட்ட உணவு வகைகளை உண்டு, 80 முதல் 90 வயது வரை மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்த காலங்களும் இருந்தன. 25 ஆண்டுகளுக்கு முன்னால் 60 வயது அடைந்த முதியவர்களும்கூட காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எவ்விதக் களைப்புமின்றி வயல்வெளியில் உழைத்தனர். இதற்குக் காரணம் அன்றைக்கு மரபு வழியில் பயிர் செய்து உண்ட உணவு தானியங்கள் சத்தானவையாகும். ஆனால், இன்றைக்குப் புதிய வகை தானியங்களைப் பயிரிடுவதால் முன்பிருந்த உடல் நல ஆரோக்கியம் இல்லை என்பதும் ஓர் ஆராய்ச்சியின் கருத்தாகும். புதிய நோய்கள் மக்களுக்கு இதனால் ஏற்படுகின்ற மரபு வழி விவசாயத்தின் வழியாக தழைகள், எரு போன்றவற்றை பயன்படுத்தினால் மண் வளம் அதிகரிக்கும். உற்பத்திச் செய்கின்ற விவசாயப் பொருட்களின் தன்மையும் சீராக இருக்கும். இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தியதின் விளைவாக மண்வளம் குறைந்து, அதைத் தீர்க்க செயற்கை உர அளவீடு ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும். இதனால், பொருளாதார அடிப்படையிலும் பாதிப்புகள் ஏற்படும். சமீபத்தில் டங்கல் திட்டத்தின் ஏற்பினால் புதிய விதைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், விலை Padent Right அடிப்படையில் பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால் மரபு வழியாக நாம் பயன்படுத்திய விதை வகைகளும் இயற்கை உரங்களும் எந்தவித பொருளாதார கட்டுப்பாடும் இருக்காது.

ஒரு பக்கத்தில் டங்கல் திட்டத்தின் ஏற்பு, மறுபக்கத்தில் பசுமைப் புரட்சி என்ற அடிப்படையில் பன்னாட்டு ஆதிக்கச் சக்தியின் கீழ் இந்திய விவசாயம் வந்துவிட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்ற பிரச்சாரம் இருந்தாலும், இதனால் ஏற்படும் விளைவுகள் மனித நேயத்திற்கு விரோதமாக இருக்கின்றது என்பதையும் எவராலும் மறுக்க முடியாது. பொருள் உற்பத்தியைப் பொருத்தவரை, பசுமைப் புரட்சி உருவாக்கிய வீரிய விதைகள் சூழலமைப்பில் புதிய பற்றாக்குறையை தோற்றுவித்தது. ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் பசுமைப் புரட்சியின் செயல் திட்டம் ‘சிறந்தவை மீதான கட்டுமானம்’ என்பதின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இங்கு சிறந்தவை என்பது சிறப்பான பிராந்தியத்தில், நல்ல திறமையான விவசாயிகள் என்ற பொருளில் உபயோகிக்கப் படுகிறது. பசுமைப் புரட்சியின் இடுபொருள் வளங்களின் அதிகரிப்பு வேளாண்மையின் மூலதனத்தை உயர்த்தியதில், அது புதிய தொழில் நுட்பத்தை இலாபகரமாக உபயோகிக்க கூடியவர்களுக்கும், அதனால் அப்புறப்படுத்தப் பட்டவர்களுக்கும் இடையே புதிய ஏற்றத்தை உருவாக்கியது. பசுமைப் புரட்சியின் இடுபொருள் பொருளாதாரத்தின் பாதிப்பால், சிறு விவசாயிகளால் தங்களது நலன்களை நிர்வகிக்க முடியவில்லை. 1970க்கும் 1980க்கும் இடையே பஞ்சாபில் பொருளாதாரக் காரணத்தினால், பெரும் எண்ணிக்கையில் சிறு விவசாயிகளின் நிலங்கள் மாயமாய் மறைந்தன.

தமிழகத்தில் கோவை, தஞ்சை, நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் மற்றும் செங்கம் பகுதிகளில் பாரம்பரிய வேளாண் பொருள் உற்பத்தி அமைப்புகள் தோன்றியுள்ளன. இவை மரபு வழியாக விதைகளைச் சேகரித்து, விவசாயிகளுக்கு வழங்கி அந்த மரபு வழி விவசாயப் பணிகளை செய்து வருகின்றது. சென்னையில் இதற்கென்று ஓர் சமூக அமைப்பு நிறுவி டாக்டர் விஜயலட்சுமி, டாக்டர் டெய்சி தர்மராஜ் போன்றவர்கள் தன்னலம் பாராமல் மரபு வழி வேளாண்மைக்குப் பாராட்டும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மொத்தத்தில் நமது நாட்டில் மரபு வழி விவசாயம் மறக்கப்பட்டு, மேல்நாட்டு ஆதிக்கச் சக்திகளின் கீழ் நமது விவசாயம் வந்துவிட்டது என்ற அச்சம் இன்றைக்கு எழுந்துவிட்டது. நமது விவசாயத்தை மேலை ஆதிக்க நாடுகளிடம் அடகு வைத்துவிட்டோம் என்பது தெளிவாகிறது. மேலை நாடுகளிலேயே மரபு வழியாகச் செய்து உற்பத்தி செய்த விவசாயம் நுகர் பொருட்களை விரும்பும் பொழுது நாம் மட்டும் ஏன் புதிய விவசாய முறை சான்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே பாழடித்துக் கொள்கிறோம் என்பதுதான் கேள்விக்குறி.

இருப்பினும், நாம் புதிய விவசாயத்தை நம்பி 27 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தினால் அதையும் விடமுடியாத சூழ்நிலை இன்றைக்கு நமக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், மரபு வழி விவசாயம் இன்றைக்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகள், தேவை, உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு நுகர்வோர்களின் நன்மை கருதி, நம் மரபு வழி விவசாயத்தை இன்றைக்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க, நமது வேளாண்மைத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முன்வர வேண்டும்.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons