மங்கள_கிழார்

மங்கள கிழாரை பற்றி கேட்டால் இன்று யாருக்கும் தெரியாது. காட்சிக்கு, சற்று இசை மேதை விளாத்திகுளம் சாமி போல் இருப்பார்.தன்னலமற்ற வாழ்வை வாழ்ந்த தியாகி, துறவு போல தவ வாழ்வு, போராளி,தமிழ் மீது பற்று, திருத்தணி மற்றும் வடக்கு எல்லைகள் மீட்புப் போராட்டத்தில் ம.பொ.சி.,தலைமையில் அவர் ஆற்றிய பெரும் பங்கு…. இவர் பிறந்த சுற்றியுள்ள பகுதிகள் அரக்கோணம், பள்ளிபட்டு-அம்மையார்குப்பம் தெருவுக்கு இவர் பெயரில் அழைக்கபட்டலும், அங்குள்ள மக்களுக்கு கூட இவரின் தியாக வாழ்வு பற்றி தெரியவில்லை. இன்றைய அரசியல் மடை மாறி விட்டது….என்ன செய்ய?
திருத்தணி மற்றும் வடக்கு எல்லைகள் மீட்புப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய ம.பொ.சி., கே.வினாயகம், மங்கள கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன், வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார், திருவாலங்காடு திருமலை பிள்ளை, நா.அ.ரசீத், சடகோபாச்சாரியார், செங்கல்வராயன், திருமதி. சரசுவதி பாண்டுரங்கன், குருபாதம் போன்ற பல தியாகசீலர்கள் திருப்பதி சித்தூர், புத்தூர், திருகாளத்தி, பல்லவநேரி போன்ற வடக்குப்பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டுமென்று எண்ணற்றப் போராட்டங்கள் நடத்தி சிறைசென்றனர். இவர்களின் போராட்டங்களின் விளைவாகத்தான் தமிழகத்தின் வடக்கு எல்லையாக திருத்தணி கிடைத்தது.
