புஷ்ஷின் திமிர்ப் பேச்சு

இந்தியாவை வேப்பங்காய் போல எதிரியாக நினைத்து அமெரிக்கா பேசி வருவது இன்றல்ல நேற்றல்ல, 60களில் கென்னடி காலத்திற்குப் பின்பு இன்றுவரை இதே நிலைப்பாடு. அமெரிக்õவில் நாய்க்குட்டிக்கு இந்தியா என்று பெயரிட்டு அழைத்தனர். இன்றைக்கு நம்மைக் சாப்பாட்டு ராமன்கள் – தின்னிப் பண்டாரங்கள் என்று அழைக்கக்கூடிய அளவில் அமெரிக்கா நடந்து கொள்வதும், புஷ்ஷின் இந்த அற்பத்தனமான பேச்சு நமக்கு ஏற்பட்ட அவமானமாகும்.

அமெரிக்கா தன் வியாபாரச் சந்தையை விரிவுபடுத்த இந்திய நடுத்தர வர்க்கத்தின்மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது. புஷ்ஷின் தலைமைச் செயலாளரான கான்டலிசா ரைசும் இம்மாதிரியே இந்தியாவைப் பார்த்துப் பேசினார். எப்பொழுதும் இந்தியா என்றால் இவர்களுக்கு ஏமாளியாகத் தெரிகிறது.

வாஷிங்டன் அருகில் இருக்கும் மிஸோரி என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில்தான் ஜார்ஜ் புஷ் இப்படிப் பேசியுள்ளார். அவர் மேலும், உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும், இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களுடைய தேவைகளை வளர்த்துக் கொள்வதும், தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதும்தான் காரணம் என்று அதிகாரத் தொனியில் பேசியுள்ளார்.

இந்தியாவில் மட்டுமில்லை, உலக அளவில் விலைவாசி உயர்ந்துவிட்டது. எல்லா இடங்களிலும் கையிருப்பு உணவுப் பொருள்கள் கரைகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்வு அதாவது 2002இல் உணவுப் பொருள்களின் கையிருப்பு நம்மிடம் 647 இலட்சம் டன்கள் இருந்தன. உணவுப் பொருள்களின் உற்பத்தி 2001-2002இல் 21.30 கோடி டன்களிலிருந்து 2004வாக்கில் 17.42 கோடி டன்களாகச் சரிந்தது. இது எப்படியென்றால் கையிருப்பு உணவுப் பொருள்களைச் சீராக மத்திய அரசு வைத்திருக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல் 2004-2005 நிதிநிலை அறிக்கையில் சிதம்பரம் உணவு உற்பத்தி அதிகமாகி விட்டது. விவசாயிகள் பூந்தோட்டம் மற்ற வேறு வகையான விவசாயம் செய்ய வேண்டும் என்று பேசி நிலைமையை மேலும் கெடுத்தார். சூதாட்டக்காரன் போல அமெரிக்க ஏகாதிபத்தியம் பேசுவது பாரதியின் பாஞ்சாலி சபதம் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இலாபம் சம்பாதிக்கும் இடைத்தரகன் சூதாட்டக்காரனாக அமெரிக்கா நமகக்குக் காட்சி அளிக்கிறது.

குதர் மனிகளிலே அண்ணே

தொண்டு மகளிர் உண்டு

சூதிற் பணயமென்றே ஆங்கோர்

தொண்டச்சி போவதில்லை

மேலும், இந்தியாவின் மொல்ல மக்கள் தொகை 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினர். இது அமெரிக்க மொத்த மக்கள் தொகையைவிட அதிகம் என்றும், இந்த நடுத்தர வகுப்பினர் வசதிகளைத் தேடுகின்றனர் என்றும் திமிர்த்தனமாகப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியதாகும். ஈரான், ஈராக் எனப் பல பிரச்சினைகளில் அமெரிக்கா தன் வக்கிரத்தனத்தைக் காட்டியது. வியட்நாம் பிரச்சினையிலிருந்து இன்று வரை அமெரிக்காவின் அராஜகம் கொடிகட்டிப் பறக்கின்றது. புஷ் உலக அளவில் செய்யும் கட்டப் பஞ்சாயத்தை யாரும் கண்டுக் கொள்வதில்லை.

இந்திய மக்கள் சம்பாதிக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் பேசியது வேறு நாடாக இருந்தால் புஷ்ஷின் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். ஆனால், இங்கோ இதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் நமக்கேன் வம்பு என்று இருக்கிறோம். பிரதமரும், மத்திய அரசும் பாராமுகமாக இருப்பது கவலையைத் தருகிறது. வெறும் கண்டனங்களை மட்டும் தெரிவித்துவிட்டு நாம் இருப்பது வேடிக்கையானது.

புஷ்ஷின் அதிகாரத்தின்கீழ் உள்ள அமெரிக்க விவசாயத் துறை கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையே அவருக்குப் பதில் சொல்லுகிற அளவுக்கு புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தாலே நாம் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று அவர் அழைத்ததன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. ஒரு ஆண்டில் ஓர் இந்தியல் 178 கிலோ உணவு தானியத்தை உண்கின்றார். ஆனால், ஒரு அமெரிக்கர் 1046 கிலோ உணவு தானியத்தை உண்கிறார். இந்தியர் 36 கிலோ பால் என்றால், அமெரிக்கர் 78 கிலோ பால் அருந்துகிறார். அதேபோல், தாவர எண்ணெயை ஒரு இந்தியர் 11 கிலோ என்றால், அமெரிக்கர் 41 கிலோ பயன்படுத்துகிறார். இறைச்சியிலும் இரு மடங்கு அமெர்ககரே பயன்படுத்துகின்றனர். இப்படிப் பல புள்ளிவிவரங்கள் இருக்க நம்மைச் சாப்பாட்டு ராமன்கள் என்று அழைக்க புஷ்ஷுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?

இன்னொரு புள்ளி விவரத்தைப் பார்த்தால் இந்தியாவில் இப்போதும் 28 கோடி பேர் பசியோடு இரவு உறக்கத்திற்குச் செல்கின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட 75 சதவீத குழந்தைகள் உணவு வசதி இல்லாமல் இரத்தச் சோகை நோயால் வாடுகின்றனர். 57 சதவீதக் குழந்தைகள் வைட்டமின் பற்றாக்குறையால் கண்பார்வையால் தவிக்கின்றனர். உற்பத்தி செய்யும் விவசாயிகள் தானியங்களை விற்றுவிட்டு, தங்கள் கடனை அடைத்துவிட்டு பட்டினியோடு இயங்கும் நாடு இந்தியாதான். 73 கோடி பேர்கள் கிராமத்தில் வசிப்போருக்கு சரியான சத்துணவு கூட கிடைப்பதில்லை. இப்படி இருக்க புஷ் பேசுவது எந்த விதத்திலும்நியாயம் கிடையாது. இந்த இரண்டு புள்ளிவிபரங்களும் புஷ்ஷின் பொய்ப் பேச்சுக்குப் பதிலாக அமைந்து விட்டது.

இந்தய அரசோ நாமோ இதற்காகக் கொதித்தெழவில்லையே என்பதுதான் வேதனை தரும் செய்தியாகும். இதன்பிறகும் பெட்ரோல், டீசலை இந்தியாதான் பயன்படுத்தி விலையைக் கூட்டிவிட்டது என்று எகத்தாளமாக நம்மைச் சீண்டி அமெரிக்கா பேசியதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். இந்த ஏடாகூடப் பேச்சு நிக்ஸன் காலத்திலிருந்து துவங்கி இன்றுவரை தொடர்கதையாகி விட்டது. நிக்ஸன் இந்திரா காந்தியைக் கிண்டலாகப் பேசியது பெரிய சர்ச்சைக்குள்ளானது. இந்தியா என்றால் பசி, பஞ்சம், பாம்பாட்டிகளே என்று சித்தரிப்பது எப்போதும் அமெரிக்காவின் வாடிக்கையாகிவிட்டது.

இதற்கு மூலகாரணங்கள் என்னவென்று பார்த்தால் நாம் எடுத்த தவறான முடிவுகள் ஆகும். உலக வங்கியில் கடன் வாங்க சரணாகதி ஆவதும், 1993இல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தி, தாராளமயமாக்கல் கொள்கையின்கீழ் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்ற வைத்ததின் விளைவுதான் இம்மாதிரியான எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளன. இப்பொபது 123 என்று அணு ஒப்பந்தத்திலும் அமெரிக்காவிடம் இந்தியா மண்டியிட்டு இருப்பதும் அபத்தமான நிலைப்பாடாகும். அணு ஒப்பந்தத்தில் நம்மைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவர்கள் பேசுவது எவ்விதத்திலும் நியாயம் கிடையாது. சந்தையின் அனைத்துப் பலன்களைச் சுரண்டி அனுபவித்துவிட்டு, நம்மீது பழி போடுவது அமெரிக்காவின் எழுதப்படாத சட்டமாகும். கடந்தகால ஆட்சியாளர்களால் தவறான பொருளாதார கொள்கை வகுத்ததன் விளைவாக ‘வல்லான் வகுத்தே வாய்க்கால்’ என்பதைப் போல அமெரிக்கக்காரன் சொல்வதை நாம் கைகட்டிக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

நாம் தொடர்ந்து அமெரிக்காவால் வஞ்சிக்கப்படுகிறோம். இந்திரா காந்தி காலத்தில் சி.சுப்பிரமணியம் உணவு அமைச்சராக இருந்தபோது, கோதுமை வழங்குவதிலும், பசுமைப் புரட்சித் திட்டத்திலும் நாம் ஏமாற்றப்பட்டோம். அவர்கள் சொல்லிய கட்டளைகளுக்கு அடிபணிந்தோம். நம்முடைய இயற்கை விவசாயத்தைக் கைவிட்டோம். அமெரிக்காவின் இரசாயன உரத்தை மண்ணில் போட்டு நம் பூமியைக் கெடுத்தோம். பூச்சி மருந்துகள் என்ற பெயரில் அடித்து அதில் வரும் உணவுப் பொருள்களைச் சாப்பிட்டு நமது உடல் ஆரோக்கியத்தை இழந்தோம். கால்நடைகளுக்குக் கொடுக்கும் வைக்கோல் அக்காலத்தில் இயற்கை விவசாயத்தில் உருண்டு திரண்டு இருந்தது. தற்போது இரசாயன உரங்கள், பூச்சி மருந்தால் வைக்கோல் சுருங்கிப் போய் அதையே மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பது சத்தற்ற தீவனமாகி விட்டது. நெல் விளையும் காவிரி டெல்டாவில் மரங்களை நட்டு வயல்வெளியில் இயற்கைத் தன்மையை நமக்கு நாமே அழித்துக் கொண்டோம்.

அதுமட்டுமல்லாமல் வீட்டு மனைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனப் பன்õட்டு நிறுவனங்களின் படையெடுப்பு போன்றவை நம்முடைய மரபு ரீதியான விவசாயக் கலாச்சாரம் முற்றிலும் மறைந்துவிட்டது. இயற்கை – மனிதன் என்ற கூட்டுறவை உடைத்து இன்றைக்குக் காடுகளை அழித்தோம். அதனால், மழை வரத்து இல்லை. வயல்வெளிகளில் நெல் பயிரைக் கெடுக்கும் எலியைப் பிடிக்க ஆந்தைகள் இன்றைக்கு இல்லை. இயற்கை அரண்களான பூச்சிகள் அடையும் கூடுகள் இல்லை. இப்படி சார்பற்ற நிலைகள் ஏற்பட்டதால் நமது விவசாயமும் பாதிக்கப்பட்டது. நமது விவசாய முறைகளுக்கு மாறாக டீசல் தயாரிக்க காட்டாமணக்கைப் பயிரிடுங்கள் என்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் நமது அரசுகள் பரிந்துரைப்பது எந்த விதத்திலும் நியாயங்கள் கிடையாது.

நம்முடைய வேளாண்மை அடையாளங்களையும், நடைமுறைகளையும் இழந்ததால் இன்றைக்கு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருத நிலத்திற்கேற்ப விவசாயமும், பயிர்களையும் ஆதியிலிருந்து செய்து வந்தோம். முப்போகங்கள், பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளில் இப்போது இல்லை.

1870இல் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சமும் பட்டினியும் சொல்லில் அடங்கா. அந்தக் காலகட்டத்தில்கூட நமது இயற்கை விவசாயத்தைக் கைவிடாமல் தொடர்ந்து நடைமுறைப்படுதி வந்தோம். பணப் பயிர்கள் மூலம் பணப் புழக்கம் ஏற்பட்டதன் விளைவாக டெல்டா பிரதேசத்தில் நெல்லை மாற்றி பணப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. காவிரி டெல்டாவில் நெல்லும், நெல்லை, கோவையில் பருத்தியும், ஒன்றுபட்ட இராமநாதபுரம், நெல்லை மாவட்டத்தில் மிளகாய் வற்றலும், ஒன்றுபட்ட வடாற்காடு, தென்னாற்காடு, தஞ்சை மாவட்டங்களில் கரும்பும் என ஆண்டாண்டு காலமாகப் பயிரிடப்பட்ட நடைமுறைகள் இன்றைக்கு இல்லை. இப்படி ஆதியில் நமக்கு நாமே வகுத்துக் கெண்ட விவசாய நெறிமுறைகளில் நாமே மாற்றிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவே தற்போது விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விபரீத நெருக்கடியாகும்.

வெளிநாட்டினரின் ‘மான்சாண்டே’ விதைகள் கொண்டு வந்து நம் நாட்டில் விதைத்து நம் பூமிக்குக் கேடு செய்தனர். நம்மிடம் இருந்த விதைகளைத் திருடி அப்புறப்படுத்தினால்தான் கேடு தருகின்ற இம்மாதிரி விதைகளை வாங்குகின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். பயிர்களும், மரங்களும் இயற்கையின்படி தானாக வளரவேண்டும். நாம் வளர்க்கக் கூடாது. இயற்கையின் வழியில் அது வளரட்டும். அதை ஒழுங்குபடுத்தி சீர்செய்வது மட்டும்தான் நமது பணியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. அதற்கேற்ப பயிர் வளமும், நீர் வளமும் இயற்கையாக அமைந்தது. அந்த குணத்தை நாம் மறந்தோம். நாம் அழித்தோம். நம் மண்ணிற்கான நடைமுறைகளை இறக்குமதி செய்து செய்முறைகள் செய்தால் அது இயற்கைக்கு மாறாகத்தான் இருக்குமேயொழிய ஆக்கப்பூர்வமான பணியாக இருக்காது.

புதிய விவசாய முறைகள் புகுந்தன. மற்றவர்களின் கட்டாயத்தால் நமது விவசாயம் மட்டும் சீரழியவில்லை. நமது இயற்கை ஆதாரங்களும் பாழ்பட்டுப் போயின. இதனால் நமது பொருளாதாரமும் இறையாண்மையும் கேள்விக்குறியாகி விட்டது. அமெரிக்காவின் ஒரு சில கட்டாயங்களால் நமது தனித் தன்மையை இழந்தோம். இமயத்திலிருந்து பனி மலை உருகி தண்ணீர் ஓடிய கங்கை இன்று வறண்டுவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடிக்கு மேல் இருந்த காடுகளில் 300 அட உயரமுள்ள மரங்கள் வெட்டப்பட்டு அப்பகுதியே மொட்டையாக்கப்பட்டது. இதனால் ஈரக் காற்று அங்கு வருவதைத் தடுத்து மழையாக மாற்ற இயலவில்லை. அந்த மொட்டைக் காட்டில் இன்று காப்பித் தோட்டங்களும், டீ எஸ்டேட்டுகளும், முட்டை கோஸ், கேரட் உற்பத்தி செய்கின்ற குட்டையான செடிகளே அங்கு வளர்கின்றன. இம்மரங்கள் பசுமையாகக் காட்சி அளிப்பது மட்டுமல்லாமல் நமக்கு மழை அளிக்கின்றது. காய் கனிகளை வழங்குகின்றது. கால்நடைகளுக்கு உணவு வழங்குகிறது. கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு பிராண வாயு நமக்குக் கிடைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட காடுகளை அழித்து புதிய திட்டங்கள் தீட்டுவது என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இவ்வகையான இயற்கைக்கு விரோதமான நிலைகளால், கடல்மட்டம் உயர்ந்து கிழக்குக் கடற்கரையையே கடல் அழித்து விடுமோ என்ற அச்சத்தைப் பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நமது நாட்டில் வறட்சியும், வளமான பகுதியும் இருக்கின்றன. உலகத்தில் வளமான கலிபோர்னியாவும், வறட்சியான சகாராவும் நம் நாட்டில் இடம் பெற்றுள்ளது. நாம் பெற்றுள்ள இயற்கை வளத்தைச் சீராகப் பயன்படுத்த நாம் தவறிவிட்டோம். இந்த இயற்கைப் பாதிப்பால் பல் துறையிலும் நமக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விவசாயம், பொது சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகள் சீர்கெட்டு விட்டது. இந்த கேட்டிற்கு யார் காரணம்? நம் நலன் நாடாத திட்டமற்ற மேற்கத்திய நாடுகளின் அபிமானிகள் சிலர் நமது தலைமைப் பொறுப்பிலும், சிவப்பு நாடா வகுக்கும் அதிகார வர்க்கத்திலும் உட்புகுந்து நமது பரிபாலனத்தில் இவர்கள் செய்கின்ற கேட்டால் வந்த வினையே ஆகும்.

ஒற்றை வைக்கோற் புரட்சி மற்றும் Nச்tதணூச்டூ ஙிச்தூ ணிஞூ ஊணிணூட்டிணஞ் என்ற நூலில் இயற்கையோடு கூடிய விவசாயம் வேண்டும் என்றும், அம்மாதிரியே நம் பயிர்களை வளர்க்க வேண்டும். ஜப்பானில் 52 வாரம் மழை பொழிகிறது. தமிழகத்தில் மூன்று மாதம் மட்டும்தான் மழை. அந்த வகையில் எது சாத்தியமோ அதைச் செய்வதை விட்டுவிட்டு, அமெரிக்கா மாதிரி, ஜப்பான் மாதிரி என்று நாம் நடைமுறைக்கு வந்தால் வெற்றி பெற முடியாது. எனவே, நமது விவசாய மரபுகளையும், தொழிற் கொள்கைகளையும் நமக்கு நாமே வகுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய வெளிநாட்டவரின் கட்டளைக்கிணங்க நாம் அடிபணியக் கூடாது.

இன்றைக்குள்ள நிலையில் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி விட்டதால் புஷ் போன்றோருடைய பேச்சுக்கள் மேலும் தொடரலாம். பாரதி பாடியவாறு ‘உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு’ என்ற வகையில் உழைத்த விவசாயி வாடுகிறான். உழைப்பில்லாத இடைத்தரகர்கள் செழிக்கின்றனர். இந்திய மண் வாடுகிறது. இங்கு வந்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வாழ்ந்து செழிக்கின்றன. இம்மண்ணின் மைந்தர் கடனால் விஷம் அருந்திச் சாகின்ற நிலை. விடுதலை வேள்வியில் பலர் செய்த அரிய தியாகங்களின்மூலம் நாடு விடுதலை பெற்றது. ஆனால், இன்றைக்கு இதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் நாட்டை அடகு வைக்கும் பணியில் ஆளவந்தார்கள் முனைப்போடு இருக்கின்றனர். ஆகையால்தான் புஷ் போன்றவர்கள் நம்மைக் கொச்சைப்படுத்தி ஆதாரமில்லாமல் பேச முடிகிறது.

– சங்கொலி, 23.05.2008

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons