மறுமலர்ச்சியின் வரலாறு

உலக வரலாற்றில் பிரான்சில் நடந்த தொழில் புரட்சி, ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சி, இந்தியாவில் நடந்த சுதந்திரப் போர் போன்றவற்றை போல் அய்ரோப்பிய வரலாற்றில் 15,16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஏற்பட்டதே மறுமலர்ச்சி (Renainance) ஆகும். ஆங்கில அறிஞர்கள் மறுமலர்ச்சியை மறுபிறவி என பொருள்பட கூறியுள்ளனர். கிரேக்கத்திலும், ரோமிலும் கதை, இலக்கியம், சிற்பம், ஓவியம், இசை, நாடகம், தத்துவம், மதக் கொள்கைகள் (Theology) ஆகிய துறைகளில் பண்டைய படைப்புகளுக்கு உயிரூட்டி 16ஆவது நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்தனர்.

மறுமலர்ச்சியின் அடிப்படைத் தத்துவம் மனிதநேயமும், கலாச்சாரமும் அழிவின்றி காக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் தங்களுடைய பணிகளை மேற்கொண்டனர். கிருத்துவ மதக் கொள்கைகளின் நடைமுறைகள்படி ஒவ்வொரு துறையிலும் மறுமலர்ச்சிக்கு பணிகளை ஆற்றினர். கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து இத்தாலிக்கும், இத்தாலியிலிருந்து கான்ஸ்டாண்டி நோபிளுக்கும் சென்று அறிஞர் பெருமக்கள் இந்த மகத்தானப் பணியில் ஈடுபட்டனர்.

துவக்கத்தில் பிக்போ டேல்லா மிராண்டலோ என்பவர் 15ஆவது நூற்றாண்டில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று அப்பகுதியிலுள் தத்துவங்களை அறிந்து ஏறத்தாழ புதிதாக 900 தத்துவங்களை இத்தாலியில் படைத்தார். இவர்தான் மறுமலர்ச்சியின் தத்துவத்தை வெளிக்கொணர்ந்தார். அதில் மனித இனத்திற்கு அரிய பண்புகள் உண்டு. அந்த பண்புகளுக்கு எவ்வித சேதாரமும் இன்றி காப்பாற்றப்பட வேண்டுமென்றும், அவ்வாறு தொய்வுகள் ஏற்பட்டாலும் அவை சரி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கலை, கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம், தத்துவம் போன்ற பல துறைகளில் இத்தாலிய – கிரேக்க கலைஞர்கள் மறுமலர்ச்சியைக் கண்டனர். இக்காலத்தில் தோன்றிய சிற்பக் கலைஞர்களும், ஓவியர்களும் அறிமுகமற்ற சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து தோன்றி அவர்களது பணிகளைப் பாராட்டக்கூடிய வகையில் செய்தனர். இப்பணியில் கல்வேறு குழுக்களாக இருந்து பொதுநோக்கோடு ஓவியர்களும், சிற்பக் கலைஞர்களும் கலையை வளர்த்தனர். இப்படிப்பட்ட கலைசூர்கள் மறுமலர்ச்சியின் காவலர்கள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டு புகழ் பெள்ளனர். லியார்னோ டார்வின்சி தீட்டிய இறுதி விருந்து (Last Supper) என்ற ஓவியம் தீட்டினார். ஓவியங்கள் தீட்டும்போது கணித (எஞுணிட்ஞுணtணூதூ) முறைப்படி தீட்டப்பட்டது.

புகழ்பெற்ற மோனோலிசா ஓவியமும் லியார்னோ டார்வின்சியால் படைக்கப்பட்டது. இப்படைப்புகள் யாவும் தத்ரூபமாக மக்களை புகைப்படம் போன்று எடுத்துக்காட்டியது. லியார்னோ டார்வின்சி ஒரு ஓவியர் மட்டுமல்லாமல், சிற்பத் துறையிலும், பொறியியல் துறையிலும், விஞ்ஞானத்திலும், தத்துவத்திலும், இசையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் ஆகாய விமானத்தை வடிவமைத்தார்.

மைக்கல் ஏஞ்சலோவின் புனித மேரியின் மடியில் கிறிஸ்து தவழும் படைப்பும் இக்காலத்திலும் சிறப்புப் பெற்றது. மைக்கேல் ஏஞ்சலோவின் படைப்புகள் வாடிகனில் உள்ள தேவாலயத்தில் இன்றும் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய படைப்புகளில் ‘இறுதித் தீர்ப்பு’ (The Last Judgement), ‘மனிதனின் வீழ்ச்சி’ (The fall of Man) ஆகியவை புகழ்பெற்றவையாகும்.

ரேபில் என்ற கலைஞரும் பல்வேறு படைப்புகளை செய்தார். ‘ரேபில்’ன் படைப்புகளில் முக்கியமானது ‘புனித மேரி’ ஓவியமாகும். இக்காலத்தில் உடலியல் அமைப்புகளின் குறிப்பாக உடலின் நரம்புகள்கூட வெளிப்பட பல சிற்பங்களை ஓவியங்களாக தீட்டப்பட்டன. மறுமலர்ச்சி காலத்தில் தீட்டப்பட்ட இப்படைப்புகள் 12,13ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த ஓவிய அமைப்பு முறையில் மாற்றிய வகையில் இருந்த புதிய கட்டட அமைப்புக் கூளுகள் நடைமுறைக்கு வந்தன. முதன் முதலாக புதிய கட்டட அமைப்பு முறையை புனித பீட்டர் ஆலயத்தில் இக்காலத்தில் அமைக்கப்பட்டது. வளர்ந்த கோபுர உச்சிகளுடன் தேவாலயங்கள் கட்டப்பட்டன.

அய்ரோப்பாவில் இலக்கியத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகள் சிறப்புற்றன. இலத்தீன் மொழிதான் அன்றைய தினம் கல்விக்கும், இலக்கியத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய மொழிகளும், இலக்கியங்களும் வளர்ச்சி அடைந்தன. நவீன அய்ரோப்பிய இலக்கியங்கள் தோன்றின. கவிதை, நாடகம், கதை போன்றவை தோன்றின. ஏõண்டேயின் ‘டிவெய்ன் காமெடி’ படைக்கப் பெற்றது. டாண்டே இலத்தீன் மொழியில் அதிகமான நூல்களை எழுதியவர். புகழ்பெற்ற காண்டிபரி கதைகள் எழுதப்பட்டன.

தாமஸ் மூர் ‘உடோப்பியாவும்’, மாக்கிய வெல்லியின் அரசியல் படைப்புகளும் புகழ்பெற்றன. இக்காலத்தில் புகழ்பெற்ற பிரின்ஸ் நூலால் நாடு (State) என்றால் என்ன என்பது காட்டப்பட்டது. நகைச்சுவையான ‘டான் குவிக்சாட்’ என்ற பைத்தியக்கார அரசரின் கதையும் புகழ்பெற்றது. பிரான்சிஸ்பேகன் என்ற ஆங்கில அறிஞர் பல்வேறு தலைப்புகளில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் சிறப்பாக அரங்கேறின. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எதுவும் துவக்கத்தில் எழுதப்படவில்லை என்பதும், நாடகங்களாக நடிக்கப்பட்டபோதுதான் எழுதப்பட்டன என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. விளையாட்டுத் துறையில் செஸ் விளையாட்டு மக்கள் மத்தியில் அறிமுகமாயிற்று.

அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சுக் கூடங்கள் நிறுவப்பட்டன. இதனால் நூல்களை எளியவர்களும் வாங்கக் கூடிய நிலை ஏற்பட்டது. அச்சிட்ட பைபிள் எளிதாக மக்களுக்குக் கிடைத்தது.

அறிவியல் மறுமலர்ச்சி தொடங்கியது. வானியல் ஆராய்ச்சிகள் துவங்கின. போலந்து நாட்டைச் சேர்ந்த கோபர் நிகஸ், உலகம், சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை வெளியிட்டார். இவர் இத்தாலியில் வாழ்ந்தவர். கலிலியோ, தொலைநோக்கியை கண்டுபிடித்தார். கோபர் நிகஸின் உண்மையை கலிலியோ உறுதிபடுத்தினார். கெப்ளர் என்ற விஞ்ஞானி கணிதத்தையும், வானிலையையும் இணைத்து பல அறிவியல் கோட்பாடுகளை வெளிப்படுத்தினார். இதனால் பிற்காலத்தில் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு கொள்கையை கண்டுபிடித்தார். இதன் விளைவாக நியூட்டனுடைய விஞ்ஞான கொள்கையும் அமைந்தது. புதிய தற்கால விஞ்ஞான வளர்ச்சி மறுமலர்ச்சி காலத்தின் துவக்கமே என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மருத்துவம், சுகாதாரம் போன்ற புதிய கண்டுபிடிப்புகளும் நடைபெற்றன. மனித உடற்கூறுகளில் இருப்பது என்ன என்பதுபற்றி அறியப்பட்டது. இரத்த ஓட்டம், இறப்பு பற்றிய ஹார்வி விஞ்ஞானப்பூர்வமான முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய நாடுகளை கப்பல் பயணம் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் இக்காலத்தில்தான் தோன்றின. எண் கணிதத்தின் அளவுகள் விவாதிக்கப்பட்டன. திசை காட்டும் கருவியை பற்றி அறிந்தனர்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் அக்காலத்தில் உள்ள குறைந்த அளவு வசதிகளுக்கேற்ப மாபெரும் பணிகளை பல அறிஞர்கள் செய்தனர். இதனால் அன்றைக்கு அய்ரோப்பாவில் நாகரிகங்களும் புதுப்பிக்கப்பட்டது. மனித நேயம் காத்து ஒரு புது யுகத்தை அன்றைக்குக் கண்டனர். இன்றுள்ள பல்வேறு முன்னேற்றங்களுக்கு அடிப்படை அன்யை மறுமலர்ச்சியின் தத்துவங்களே. இதனுடைய தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைந்தன. இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவும், அடர்த்தியான காடுகள் நிறைந்த தென் அமெரிக்காவும் அறிவியல் பூர்வமான வாழ்க்கைக்கு வந்தன. மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரம், நாகரிகம் மேம்பட்டது. சுமேரியா, நைல், திராவிட மற்றும் அய்ரோப்பிய நாகரிகங்கள் தோன்றி மறைந்த பின்பு மறுமலர்ச்சி காலத்தில் அறிவுபூர்வமான வாழ்க்கைத் துவங்கியது.

காட்டுமிராண்டித்தனமாகவும், கொடுங்கோல் அரசர்களுக்குக் கீழிருந்த மக்களிடம் தங்கள் உரிமைகள் என்ன? எப்படி நாகரிகம் கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்ற ஒரு சிந்தனை தோன்றி மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. அரசியல் தத்துவங்கள் விஞ்ஞானப்பூர்வமாக அணுகப்பட்டன.

மக்கள் சாசனம் இங்கிலாந்தில் மக்களுக்கு வழங்கிய உரிமைகள் சரியாக சென்றடையவில்லை. ஆனால், மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட அரசியல் தத்துவங்கள் மக்களிடையே சென்று மக்களை விழிப்படையச் செய்தன. ஒரு தத்துவம் அல்லது கோட்பாட்டிற்கு சேதாரமோ அல்லது தொய்வோ ஏற்பட்டால் அதை சீரமைக்கும் பணியில் சில ஆர்வலர்கள் தோன்றி அப்பணியை மேற்கொள்வார்கள்.

அதேபோன்று தமிழகத்தில் அண்ணா ஏற்றி வைத்த கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் இன்று சோதனை ஏற்பட்டுள்ளது. அதை கட்டிக் காக்கும் பணியில் மறுமலர்ச்சி தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது. தமிழகத்தின் நலனும், மாநில உரிமைகளும் பெறக்கூடிய வகையில் வைகோ தலைமையில் போராடுவோம் வாரீர்! வாரீர்!!

– சங்கொலி, 19.09.1997

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons