கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்

—————————————-
அதிகம் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர். சென்னையில் உள்ளவர்களின் நீராதாரம் இம்மலையிலிருந்தே கிடைக்கிறது.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, தெற்கிலிருந்துதுவங்கி, கொல்லிமலை, பச்சைமலை,சேர்வராயன்மலை, கல்வராயன்மலையிலிருந்து ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது.
கிழக்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும் மேற்குத் தொடர்ச்சிமலையைப்போல தொடர்ச்சியாக இல்லாமல் துண்டுதுண்டாக காணப்படுகிறது.
இதன் முக்கிய காரணம், வங்கக் கடலில் கலக்கும் கிழக்குநோக்கிப் பாயும் நதிகளான மகாநதி, துங்கபத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் நிலஅரிப்புதான். ஆனாலும் இம்மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக்கொன்று இணைந்தே உள்ளன.
கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இம்மலைத்தொடரின் நிலவியல் பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் புதிரான வரலாறுகளைக் கொண்டது.
கருங்கல் பாறைகள், படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளது. சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்கள் இதில் கிடைக்கின்றன.
புவியமைப்பின் மேற்பகுதியில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியில் பண்டையகால பாறைக் குழுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இங்குள்ளபாறைகள் பிரதிபலிக்கின்றன. இப்பாறைகளுக்கிடையே உள்ளஅழுத்தங்களும் வெடிப்புகளும் அவற்றுக்கு சான்றாக உள்ளன.
கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்திருக்கும். இங்குள்ள வறண்ட வனப்பகுதிகளில் காப்பித் தோட்டங்கள் பயிரிடப்படுகின்றன.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. இதன் உயரமான சிகரம் ஆந்திராவில் உள்ள ஜிந்தகடா மலையாகும். இதன் உயரம் 1690மீட்டர். உயரம் குறைவான பல குன்றுகளும் இங்கு அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் குறிப்பிடத் தகுந்தவை.
நீலகிரி பகுதியில் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருடன் புவியியல் ரீதியாக ஒன்றை ஒன்று நெருங்குகிறது.
தெற்கே, நெல்லைச்சீமையில் துவங்கும் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் சேலம் வட்டாரத்தில் சேர்வராயன் மலையிலிருந்து புவியியல் முக்கியத்துவம் பெறுகிறது. சேர்வராயன் மலையில்தான் ஏற்காடு அமைந்துள்ளது. சேர்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென்பெண்ணை – பாலாறு நதிகளுக்கு இடையேயுள்ள சவ்வாதுமலை சுமார் 1160மீட்டர் உயரம் கொண்டது. 80 கி.மீ.நீளம் 32 கி.மீ. அகலத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வரை சவ்வாது மலை பரவியுள்ளது. ஏலகிரி இம்மலையின் ஒரு பகுதி.
சவ்வாதுமலை கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்டது. வடகிழக்குப் பருவமழையின் மூலமாக பெருமளவு மழைப்பொழிவு கிடைக்கிறது.
செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்டநதி போன்ற நதிகள் சவ்வாது மலையில் உற்பத்தியாகின்றன. பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி இங்கு அமைந்துள்ளன.
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. இது கள்வர் என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப்பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
கர்நாடகா மாநிலம் தென்பகுதியில் கொல்லேகாலில் அமைந்திருக்கிறது மாதேஸ்வரன் மலை. கடல் மட்டத்திலிருந்து 3000அடி உயரத்தில் அமைந்துள்ள, தமிழக எல்லையான சத்தியமங்கலம் வனப்பகுதியில் தான் வீரப்பன் சாம்ராஜ்ஜியம் நடந்தது. மைசூரில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இம்மலையில் மாதேஸ்வரன் கோயில் உள்ள
து.
ஆந்திராவின் தென்கிழக்குப்பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே வெளிகொண்டா மலை உள்ளது. திருமலை-திருப்பதி கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுரமைல்கள் பரப்பளவில் ஏழுமலைக்குன்றுகளாக சூழ்ந்து பரவியுள்ளது. சேசாலம் –வெளிகொண்டா மலைத்தொடரில் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்தரி மற்றும் வெங்கடாத்திரி என இந்த ஏழு குன்றுகள் அழைக்கப்படுகின்றன. ஏழாவது குன்றான வெங்கடாத்திரியில் திருவேங்கடத்தான் திருக்கோயில் அமைந்துள்ளது.
சித்தூரில் உள்ள திருப்பதி சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் தொன்மையான பாறைக்கூட்ட இடைவெளிகள் காணப்படுகிறது. கிழக்குத்தொடச்சி மலைகளில் உயரமான மலையான ஆனந்தகிரி இத்தொடரைச் சார்ந்தவையே.
“வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” என்று தொல்காப்பியமும், “குணகடல் குமரி குடகம் வேங்கடம்” என்று நன்னூலும் தமிழகத்தின் வட எல்லையாக இந்த திருமலையினைக் குறிப்பிடுகிறது.
மாநில எல்லைகள் சீரமைப்பில் தமிழகம் திருப்பதி மட்டுமல்லாமல் சித்தூர், காளகத்தி ஆகிய பகுதிகளை ஆந்திரத்தில் இழந்துள்ளது. ம.பொ.சியின் தியாகத்தால் ஆந்திரத்திற்குச் செல்ல இருந்த திருத்தணியை மட்டும் மீட்டுள்ளோம். இங்கு குறிப்பிட்டுள்ள கொல்லேகால் மலைப்பகுதியினையும் கர்நாடகத்திடம் இழந்துள்ளோம்.
கிருஷ்ணா மற்றும் பென்னாறு நதிகளுக்கிடையே கோரமண்டல கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தூரம் சீராக அமையப்பெற்றுள்ளது நல்லமல்லா மலை. ஆந்திரத்தில் உள்ள நல்லமல்லா மலை கர்நூல், மகபூப்நகர், குண்டூர், பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. இம்மலைக்கு வடக்கு எல்லை தட்டையான பல்நாடு வடிநிலமும், தெற்கில் திருப்பதியும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலை கடல்மட்டத்திலிருந்து சுமார் 520மீ. உயரத்தில் கொண்டது.
குண்டூர், கிருஷ்ணா, மேற்குகோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் கொண்டாபள்ளி மலை அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக உள்ளது. கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பாப்பிமலை பரவியுள்ளது. இது சுற்றுலாவாசிகளை கவரும் இடமாகும்.
பாப்பி மலையின் தொடர்ச்சியாக விசாகப்பட்டினத்திற்கு வடபகுதியில் மதுரவாடா முகடு அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் நகரகடற்கரை வரை இதன் தொடச்சி உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவிஓட்டுப் பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இந்தப் புவிஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளால் ஆனது.
அடுத்ததாக, மாலியா மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் உயரம் கொண்டது. மாலியாமலைத்தொடர் சில இடங்களில் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது. மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் மதுகுலகொண்டா மலைத்தொடர் உயரமானது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா (1643மீ), சிங்கராம்குட்டா (1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன.
ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் தொடங்கி, ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியான கோராபுட்டில் அமைந்துள்ளது சந்திரகிரி பொட்டங்கி மலைத்தொகுதி. பூகோள, வரலாற்று ரீதியாக முக்கியமான மலையாக இது கருதப்படுகிறது. இங்குள்ள உயரமான மலைச்சிகரம் தியோமாலி(1672மீ) என்றழைக்கப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்றுபகுதியை இம்மலைத்தொடர் கொண்டுள்ளது. ஒடிசாவின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளை ஆறுகளும் இந்த நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. இங்குள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கமும் உள்ளது.
பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தும் மரச்சட்டம் போட்ட கருநிற சிலேட்டுகள் இம்மலை அடிவாரத்தில் உள்ள மண்ணில்தான் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள மர்காப்பூரில் சிலேட்டு தயாரிப்பு பிரதான தொழில். சிவகாசி தீப்பெட்டித் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுந்த விமர்சனங்களைப்போல மர்காப்பூரிலும் சிலேட்டு தயாரிப்புத் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சனைகள் எழுந்தது. 1990ல் மத்திய அரசின் குழந்தைத்தொழிலாளர் தடுப்பு வாரியத்தின் உறுப்பினர் என்ற முறையில் அடியேன் இப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு இதுபற்றி அறிக்கைகளை வழங்கினேன்.
இம்மலைத்தொடர்ச்சியில்அமைந்துள்ள கார்சட் மலைப்பகுதிசெங்குத்தாக உயர்ந்தும் மேற்குநோக்கிச் செல்லச்செல்ல மயூர்பன்சிலிருந்து மல்கான்கிரி வரை தாழ்ந்தும் காணப்படுகிறது. கோதாவரிக்கு வடக்கில் கார்சட் மலைகளின் உயரம் அதிகமாகி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது.
கடல்மட்டத்திலிருந்து 900மீட்டர் உயரம் கொண்டுள்ள இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச்சமவெளிகளை இணைக்கும் மேட்டுப்பாங்கான விளைநிலங்கள் உள்ளன. கிழக்கு தொடர்ச
்சி மலைகள், பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளாலே தொடராக இல்லாமல் தடுக்கப்படுகிறது. வடகிழக்கில் நீண்டதூரம் நீட்சி பெற்றிருக்கும் இதன் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத்தொகுதி என்றழைப்படுகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் விவசாயமும், இயற்கையாக வளர்கின்ற அரியமூலிகைகளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள்,
நறுமணப்பொருட்கள் ஆகியவை இங்குவாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது.
மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைகாலங்களில் வறட்சியாகவும் காணப்படும் இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கைமுறைகளும், பழக்கவழக்கங்களும் தொன்மை வாய்ந்தவை.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பிலும், வனஅடர்த்தியை கண்காணிப்பதிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப் பகுதிகளில் சுமார் 8,200 ஏக்கர் நிலங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நத்தம் சாலையில் மலைவாழிடமான சிறுமலை அமைந்துள்ளது. இங்குதான் பலரும் விரும்பி உண்ணும் மலை வாழைப்பழம் விளைகிறது.
மேற்குத் தொடர்ச்சியைவிட உயரத்தில் குறைவாக இருந்தாலும், இம்மலைத்தொடரின் வேர்கள் பூமியின் அடியாழத்தில் இணைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சிமலை தொடங்கும் வல்லநாடு மலையின் அடித்திட்டு தூத்துக்குடி தோணித்துறையில் அமைந்துள்ள மல்லாங்குளம்பாறை வரைக்கும் நீள்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் பொறியாளர் சர்.ராபர்ட் பிரிஸ்டோ துறைமுகப்பகுதிகளை ஆழப்படுத்தும் பணியின்போது இப்பாறைகளுக்கு வெடிகள் வைத்தும் தகர்க்க முடியவில்லை. இதனுடைய அதிர்வு அப்போது குற்றாலம் பாபநாசம் மலைகள் வரை எதிரொலித்ததாகச் செய்திகள்.
இந்தப் தொடர்பாறைகள் இராமேஸ்வரம் அருகேயுள்ள உத்திரகோசமங்கை வழியாக வங்கக்கடலின் உள்ளே பாய்ந்தோடி, இலங்கையில் உள்ள தலைமன்னார் காங்கேசத்துறை, இலங்கை மத்திய தோட்டப்பகுதி, நுவரேலியா வரை கிழக்குத்தொடர்ச்சி மலையின் அடித்திடிட்டு தொடர்புகளாக நீண்டுள்ளது என ஆய்வுகளும் செய்யப்படுகின்றன. பண்டைய மேருமலையின் எச்சமாக இந்தத்தொடர்புகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எப்படி மேற்குத் தொடர்ச்சி மலைகள் இயற்கையின் அருட்கொடையோ, அப்படி வங்கத்திலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதியான சோட்டா நாக்பூர் பீடபூமி, தக்காண பீடபூமி, தமிழகம், இலங்கை வரை பரவியுள்ள இந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் குறித்துவரலாறு, புவியியல், அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு, இந்தமலைத்தொடரையும், இதன் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்:
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் இந்திய மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, தெற்கிலிருந்துதுவங்கி, கொல்லிமலை, பச்சைமலை,சேர்வராயன்மலை, கல்வராயன்மலையிலிருந்து ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது.
கிழக்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும் மேற்குத் தொடர்ச்சிமலையைப்போல தொடர்ச்சியாக இல்லாமல் துண்டுதுண்டாக காணப்படுகிறது.
இதன் முக்கிய காரணம், வங்கக் கடலில் கலக்கும் கிழக்குநோக்கிப் பாயும் நதிகளான மகாநதி, துங்கபத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் நிலஅரிப்புதான். ஆனாலும் இம்மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக்கொன்று இணைந்தே உள்ளன.
கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இம்மலைத்தொடரின் நிலவியல் பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் புதிரான வரலாறுகளைக் கொண்டது.
கருங்கல் பாறைகள், படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளது. சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்கள் இதில் கிடைக்கின்றன.
புவியமைப்பின் மேற்பகுதியில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியில் பண்டையகால பாறைக் குழுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இங்குள்ளபாறைகள் பிரதிபலிக்கின்றன. இப்பாறைகளுக்கிடையே உள்ளஅழுத்தங்களும் வெடிப்புகளும் அவற்றுக்கு சான்றாக உள்ளன.
கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்திருக்கும். இங்குள்ள வறண்ட வனப்பகுதிகளில் காப்பித் தோட்டங்கள் பயிரிடப்படுகின்றன.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. இதன் உயரமான சிகரம் ஆந்திராவில் உள்ள ஜிந்தகடா மலையாகும். இதன் உயரம் 1690மீட்டர். உயரம் குறைவான பல குன்றுகளும் இங்கு அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் குறிப்பிடத் தகுந்தவை.
நீலகிரி பகுதியில் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருடன் புவியியல் ரீதியாக ஒன்றை ஒன்று நெருங்குகிறது.
தெற்கே, நெல்லைச்சீமையில் துவங்கும் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் சேலம் வட்டாரத்தில் சேர்வராயன் மலையிலிருந்து புவியியல் முக்கியத்துவம் பெறுகிறது. சேர்வராயன் மலையில்தான் ஏற்காடு அமைந்துள்ளது. சேர்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென்பெண்ணை – பாலாறு நதிகளுக்கு இடையேயுள்ள சவ்வாதுமலை சுமார் 1160மீட்டர் உயரம் கொண்டது. 80 கி.மீ.நீளம் 32 கி.மீ. அகலத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வரை சவ்வாது மலை பரவியுள்ளது. ஏலகிரி இம்மலையின் ஒரு பகுதி.
சவ்வாதுமலை கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீ. உயரம் கொண்டது. வடகிழக்குப் பருவமழையின் மூலமாக பெருமளவு மழைப்பொழிவு கிடைக்கிறது.
செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்டநதி போன்ற நதிகள் சவ்வாது மலையில் உற்பத்தியாகின்றன. பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி இங்கு அமைந்துள்ளன.
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. இது கள்வர் என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப்பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
கர்நாடகா மாநிலம் தென்பகுதியில் கொல்லேகாலில் அமைந்திருக்கிறது மாதேஸ்வரன் மலை. கடல் மட்டத்திலிருந்து 3000அடி உயரத்தில் அமைந்துள்ள, தமிழக எல்லையான சத்தியமங்கலம் வனப்பகுதியில் தான் வீரப்பன் சாம்ராஜ்ஜியம் நடந்தது. மைசூரில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இம்மலையில் மாதேஸ்வரன் கோயில் உள்ளது.
ஆந்திராவின் தென்கிழக்குப்பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே வெளிகொண்டா மலை உள்ளது. திருமலை-திருப்பதி கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுரமைல்கள் பரப்பளவில் ஏழுமலைக்குன்றுகளாக சூழ்ந்து பரவியுள்ளது. சேசாலம் –வெளிகொண்டா மலைத்தொடரில் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்தரி மற்றும் வெங்கடாத்திரி என இந்த ஏழு குன்றுகள் அழைக்கப்படுகின்றன. ஏழாவது குன்றான வெங்கடாத்திரியில் திருவேங்கடத்தான் திருக்கோயில் அமைந்துள்ளது.
சித்தூரில் உள்ள திருப்பதி சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் தொன்மையான பாறைக்கூட்ட இடைவெளிகள் காணப்படுகிறது. கிழக்குத்தொடச்சி மலைகளில் உயரமான மலையான ஆனந்தகிரி இத்தொடரைச் சார்ந்தவையே.
“வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” என்று தொல்காப்பியமும், “குணகடல் குமரி குடகம் வேங்கடம்” என்று நன்னூலும் தமிழகத்தின் வட எல்லையாக இந்த திருமலையினைக் குறிப்பிடுகிறது.
மாநில எல்லைகள் சீரமைப்பில் தமிழகம் திருப்பதி மட்டுமல்லாமல் சித்தூர், காளகத்தி ஆகிய பகுதிகளை ஆந்திரத்தில் இழந்துள்ளது. ம.பொ.சியின் தியாகத்தால் ஆந்திரத்திற்குச் செல்ல இருந்த திருத்தணியை மட்டும் மீட்டுள்ளோம். இங்கு குறிப்பிட்டுள்ள கொல்லேகால் மலைப்பகுதியினையும் கர்நாடகத்திடம் இழந்துள்ளோம்.
கிருஷ்ணா மற்றும் பென்னாறு நதிகளுக்கிடையே கோரமண்டல கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தூரம் சீராக அமையப்பெற்றுள்ளது நல்லமல்லா மலை. ஆந்திரத்தில் உள்ள நல்லமல்லா மலை கர்நூல், மகபூப்நகர், குண்டூர், பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. இம்மலைக்கு வடக்கு எல்லை தட்டையான பல்நாடு வடிநிலமும், தெற்கில் திருப்பதியும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலை கடல்மட்டத்திலிருந்து சுமார் 520மீ. உயரத்தில் கொண்டது.
குண்டூர், கிருஷ்ணா, மேற்குகோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் கொண்டாபள்ளி மலை அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக உள்ளது. கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பாப்பிமலை பரவியுள்ளது. இது சுற்றுலாவாசிகளை கவரும் இடமாகும்.
பாப்பி மலையின் தொடர்ச்சியாக விசாகப்பட்டினத்திற்கு வடபகுதியில் மதுரவாடா முகடு அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் நகரகடற்கரை வரை இதன் தொடச்சி உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவிஓட்டுப் பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இந்தப் புவிஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளால் ஆனது.
அடுத்ததாக, மாலியா மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் உயரம் கொண்டது. மாலியாமலைத்தொடர் சில இடங்களில் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது. மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் மதுகுலகொண்டா மலைத்தொடர் உயரமானது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா (1643மீ), சிங்கராம்குட்டா (1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன.
ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் தொடங்கி, ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியான கோராபுட்டில் அமைந்துள்ளது சந்திரகிரி பொட்டங்கி மலைத்தொகுதி. பூகோள, வரலாற்று ரீதியாக முக்கியமான மலையாக இது கருதப்படுகிறது. இங்குள்ள உயரமான மலைச்சிகரம் தியோமாலி(1672மீ) என்றழைக்கப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்றுபகுதியை இம்மலைத்தொடர் கொண்டுள்ளது. ஒடிசாவின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளை ஆறுகளும் இந்த நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. இங்குள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கமும் உள்ளது.
பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தும் மரச்சட்டம் போட்ட கருநிற சிலேட்டுகள் இம்மலை அடிவாரத்தில் உள்ள மண்ணில்தான் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள மர்காப்பூரில் சிலேட்டு தயாரிப்பு பிரதான தொழில். சிவகாசி தீப்பெட்டித் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுந்த விமர்சனங்களைப்போல மர்காப்பூரிலும் சிலேட்டு தயாரிப்புத் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சனைகள் எழுந்தது. 1990ல் மத்திய அரசின் குழந்தைத்தொழிலாளர் தடுப்பு வாரியத்தின் உறுப்பினர் என்ற முறையில் அடியேன் இப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு இதுபற்றி அறிக்கைகளை வழங்கினேன்.
இம்மலைத்தொடர்ச்சியில்அமைந்துள்ள கார்சட் மலைப்பகுதிசெங்குத்தாக உயர்ந்தும் மேற்குநோக்கிச் செல்லச்செல்ல மயூர்பன்சிலிருந்து மல்கான்கிரி வரை தாழ்ந்தும் காணப்படுகிறது. கோதாவரிக்கு வடக்கில் கார்சட் மலைகளின் உயரம் அதிகமாகி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது.
கடல்மட்டத்திலிருந்து 900மீட்டர் உயரம் கொண்டுள்ள இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச்சமவெளிகளை இணைக்கும் மேட்டுப்பாங்கான விளைநிலங்கள் உள்ளன. கிழக்கு தொடர்ச
்சி மலைகள், பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளாலே தொடராக இல்லாமல் தடுக்கப்படுகிறது. வடகிழக்கில் நீண்டதூரம் நீட்சி பெற்றிருக்கும் இதன் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத்தொகுதி என்றழைப்படுகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் விவசாயமும், இயற்கையாக வளர்கின்ற அரியமூலிகைகளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள்,
நறுமணப்பொருட்கள் ஆகியவை இங்குவாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது.
மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைகாலங்களில் வறட்சியாகவும் காணப்படும் இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கைமுறைகளும், பழக்கவழக்கங்களும் தொன்மை வாய்ந்தவை.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பிலும், வனஅடர்த்தியை கண்காணிப்பதிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப் பகுதிகளில் சுமார் 8,200 ஏக்கர் நிலங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நத்தம் சாலையில் மலைவாழிடமான சிறுமலை அமைந்துள்ளது. இங்குதான் பலரும் விரும்பி உண்ணும் மலை வாழைப்பழம் விளைகிறது.
மேற்குத் தொடர்ச்சியைவிட உயரத்தில் குறைவாக இருந்தாலும், இம்மலைத்தொடரின் வேர்கள் பூமியின் அடியாழத்தில் இணைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சிமலை தொடங்கும் வல்லநாடு மலையின் அடித்திட்டு தூத்துக்குடி தோணித்துறையில் அமைந்துள்ள மல்லாங்குளம்பாறை வரைக்கும் நீள்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் பொறியாளர் சர்.ராபர்ட் பிரிஸ்டோ துறைமுகப்பகுதிகளை ஆழப்படுத்தும் பணியின்போது இப்பாறைகளுக்கு வெடிகள் வைத்தும் தகர்க்க முடியவில்லை. இதனுடைய அதிர்வு அப்போது குற்றாலம் பாபநாசம் மலைகள் வரை எதிரொலித்ததாகச் செய்திகள்.
இந்தப் தொடர்பாறைகள் இராமேஸ்வரம் அருகேயுள்ள உத்திரகோசமங்கை வழியாக வங்கக்கடலின் உள்ளே பாய்ந்தோடி, இலங்கையில் உள்ள தலைமன்னார் காங்கேசத்துறை, இலங்கை மத்திய தோட்டப்பகுதி, நுவரேலியா வரை கிழக்குத்தொடர்ச்சி மலையின் அடித்திடிட்டு தொடர்புகளாக நீண்டுள்ளது என ஆய்வுகளும் செய்யப்படுகின்றன. பண்டைய மேருமலையின் எச்சமாக இந்தத்தொடர்புகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எப்படி மேற்குத் தொடர்ச்சி மலைகள் இயற்கையின் அருட்கொடையோ, அப்படி வங்கத்திலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதியான சோட்டா நாக்பூர் பீடபூமி, தக்காண பீடபூமி, தமிழகம், இலங்கை வரை பரவியுள்ள இந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் குறித்துவரலாறு, புவியியல், அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு, இந்தமலைத்தொடரையும், இதன் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14.08.2020

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons