வட சென்னை – ‘அகஸ்தியா’

வட சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது ‘அகஸ்தியா’ திரையரங்கம். இத்திரையரங்கம் 1967-ம் ஆண்டு திறக்கப்பட்டு முதல் படமாக ஆர்.முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்த ‘பாமா விஜயம்’ திரையிரப்பட்டது.

அன்று முதல் பல வெற்றிப் படங்கள் இத்திரையரங்கில் திரையிடப்பட்டு வடசென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. மேலும் பல திரைப்பட படப்பிடிப்புகளும் இத்திரையரங்கில் எடுக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் இத்திரையரங்கில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. 1,004 இருக்கைகள், 70 எம்.எம். வசதி என 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ‘அகஸ்தியா’ திரையரங்கம் போதுமான வருமானம் இல்லாததால் நாளையுடன் (செப்.1-ம் தேதி) மூடப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளைக் கடந்து வடசென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ‘அகஸ்தியா’ திரையரங்கமும் இருந்து வந்த நிலையில் நிரந்தரமாக திரையரங்கம் இன்றுமூடப்படுவது அப்பகுதி சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சட்டக்கல்லூரியில் படிக்கும் போது Broadway எம்யூசிஇல் (Madras University Students Clube ) 1970களில் தங்கி இருந்தேன்.அப்போது கவனித்த வடசென்னை மண்வாசனையும், சரளமான நகைச்சுவையும் தங்களின் பிரத்யேக அடையாளங்கள்.

Ymca நயன்ஸ், மெட்ராஸ் கபே,குறளகம், பாய்க்கடை, பிராட்வே நாயர் பேப்பர்கடை, catholic center, பர்மா பாஜார், மண்ணடி,பாலிமர் விடுதி, கோகலே ஹால், ஜனசக்தி (CPI)சிவப்புகட்டிடம்,பிராட்வே,பிரபாத்,மினர்வா,முருகன்,மகாராணி, பாரத், அகஸ்தியா என தியேட்டர்கள்,அண்ணா பூங்கா, தண்டையார் பேட்டை மணிக்கூண்டு, பாரத், க்ரௌன், மின்ட், ஸ்டேன்லி மருத்துவமனை, கல் மண்டபம் செயிண்ட் ஆன்ஸ் கான்வென்ட், ரத்னநாயகர் பதிப்பகம், திருவெற்றியூர் வெங்கடேஷ்வரா, அறிவகம் , தியாகராயா கல்லூரி, காளிங்கராயன் தெரு, சிமிண்ட் ரோடு, பேசின் பிரிட்ஜ், காசிமேடு, யானை கவுனி என பல மறக்க முடியாதவை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்

01.09.2020

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons