வாழ்க பாரதம்! வாழ்க வையகம்!! வாழ்க தமிழினம்!!!

கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கொழும்பு கிழக்கு முனையம் (Eastern Terminal) இந்தியாவிற்கு கொடுப்பதை குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து பேசினார் என்பதை பதிவு செய்திருந்தேன்.

ஆனால் நேற்றும் இன்றும் இலங்கையிலிருந்து வரும் தகவல் கொழும்பு கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என்று இலங்கை தொழிற்சங்கங்களை தூண்டிவிடுவதாக தகவல் வருகிறது.

எவ்வளவுதான் இந்திய அரசாங்கம் இலங்கையின் மீது கரிசனத்தோடு ஆதரவாக இருந்தாலும் நடுவீட்டில் நாயை குளிப்பாட்டி வைத்த கதைதான். இதை டெல்லி பரிவாரங்கள் உணரவேண்டும்.

நூற்றுக்கணக்கான இலங்கையில் இந்து கோவில்கள் அழிக்கப்படுகிறது. இதற்க்கு டெல்லியிலிருந்து எந்தவிதமான கண்டனமும் வரவில்லை. இலங்கை அரசு இந்தியாவை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அங்குள்ள தமிழர்களை அழித்து வருகிறது. தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிறது.

சீனாவின் நம்பிகைக்குரிய தோழனாக இலங்கை திகழும் போது நம் கண்மூடி கொண்டிருந்தால் நமக்கும் ஆபத்துகள் தான். இந்தியப் பெருங்கடலில் கவலை சூழ்நிலை நமக்கு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போனார் வந்தார் என்ற கதியில் எந்தவித சாதகமான நிலையும் ஏற்படவில்லை. இலங்கை தமிழர்கள் நலன் பாதுகாக்க படவேண்டிய எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிற்சங்கங்களை ஏவி விட்டு கோத்தபய அரசு இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தை தரக்கூடாது என்று ஒரு கபடநாடகத்தை நடத்தி ஒரு போலியான தனது கையறுநிலையையும் இந்தியாவிற்கு பாசாங்கான நடவடிக்கையும் செய்கிறது. இந்தியா இதையும் நம்பும்.

’Integrity,peaceful solution within the framework of the Lanka Constution’ என்று சிந்துபாத் கதை போல இந்தியாவும் சொல்லும் இலங்கையும் சொல்லும், ஆனால்,அங்கே தமிழர்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஜெனீவா, ஐநா மனித உரிமை ஆனைய
தீர்மானத்திலும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முடிவு எடுக்க வேண்டும்

வாழ்க பாரதம் ….
வாழ்க வையகம்…..
வாழ்க தமிழினம் .

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons