தொய்வில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம்.
திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி –கருமேனியாறு – நம்பியாறு இணைப்பின் மூலம் 2.765டி.எம்.சி நீர், நான்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டது. இதனால் 42,012.86ஏக்கர் புதிய பாசனப்பரப்பு உட்பட, 56,931.84ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் கிடைக்கும்.
மேலும் இப்பகுதியில் குடிநீர் வசதியும், நிலத்தடி நீரும் உயர்வதால் ஏறக்குறைய 50கிராமங்களுக்குமேல் பயன்பெறும். இத்திட்டத்திற்காக 369கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான செலவீனம் மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாகும். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பாராமுகத்தினால் இந்த நதிநீர் இணைப்பு தாமதமாகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2015.
#KsRadhakrishnan #KSR_Posts
#தமிழகநதிகள்_இணைப்புத்திட்டம் – #RiverlinkinginTamilNadu.
see also : http://ksr1956blog.blogspot.in/2015/07/river-linking.html
http://ksr1956blog.blogspot.in/2015/06/linking-of-ken-and-betwa-rivers.html
http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html
http://ksr1956blog.blogspot.in/2015/03/river-linking-in-tamil-nadu.html