சீனா- சில்க் வே – China – silk way

0

இன்றைக்கு டெல்லியில், அரசியல்  நண்பர்கள்,  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசியர் நண்பர்களுடன் சந்தித்துப் பேசிய பொழுது..

இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருப்பதையும், சீனாவினுடைய ஆதிக்கத்தினால், தெற்கே இந்து மகா சமுத்திரத்திலும், வடகிழக்கே அருணாச்சல பிரதேசத்தில் ஊடுருவி, பிரம்மபுத்திரா நதிநீர் வரத்தை திருப்பி, அணைகள் கட்டுவதும்,  மின் உற்பத்தி செய்வதற்காக அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதும்,

வடமேற்கில் ஆப்கானிஸ்தான் வழியாக, “சில்க் வே” (silk way)  என்ற வியாபார தரைவழி மார்க்கத்தை அமைத்து பாகிஸ்தான் வழியாக குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் வரை எட்ட முயன்று வருகிறதையும் குறிப்பிட்டார்கள்.

மேலும் இந்துமகா சமுத்திரத்தில் கடல் மார்க்கமாகவும் தன்னுடைய
 “சில்க் வே” வியாபார தடங்களை அமைத்து ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் தன்னுடைய வியாபாரத்தை பெருக்க சீனா முயற்சித்து வருகிறது. கடல் பிராந்தியங்களின் அமைதியை குலைத்துவரும் சீனாவின் இந்த நடவடிக்கை பற்றி எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தையே தெரிவித்தார்கள்.

சீனா நம்மோடு  புன்னகை முகம் காட்டினாலும், சீன டிராகனின் அபாயக் கரங்கள் ஒவ்வொரு நாளும் நம்மை நோக்கி நகன்றபடியே இருக்கின்றன. இப்படி குறிப்பிட்ட சில விஷயங்களை அனைவருமே சுட்டிக்காட்டிப் பேசியது  சிந்திக்க வேண்டிய செய்திகளாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2015

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons