இலங்கை அரசு மீறிய ஒப்பந்தம்
கடந்த பிப்ரவரி 2, 2021 அன்று இலங்கை அரசு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்கிய ஈசிடி என்ற கொழும்பு கிழக்கு துறைமுக முனையத்தை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இந்தியாவையும் ஜப்பானையும் கேட்காமலே கையொப்பமான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதன் பின் இந்திய ஹை கமிஷனர் கோபால் பக்லே இலங்கை வெளியுறவு அமைச்சர் குணவர்த்தனாவை சந்தித்து இது குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சீனாவின் பேச்சைக் கேட்டு ஒப்பந்தத்தை மீறி இலங்கை கோத்தபய, மகேத்திர ராஜபக்சே விருப்பத்திற்கு ஏற்ப ரத்து செய்தது சிறுபிள்ளைத் தனமானது. இதை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ராஜபக்சே தலைமையில் பிப்ரவரி 1, 2021-ல் நடந்த இலங்கை அமைச்சரவையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தன்னிச்சையாக இலங்கை ஒரு ஒப்பந்தத்தை மீறுவது என்பது நல்லதல்ல. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த பிரச்சினையை எளிதாக விட்டுவிடமுடியாது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.







