பசிபிக் பெருங்கடலில் சீனா

0

பசிபிக் பெருங்கடலில் ஒரு பகுதி தென்சீன கடல் என்று அழைக்கப்படுகின்றது. பன்னாட்டு கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த தென்கடலில் நடைபெறுகிறது. இந்த வழியாக கிட்டத்தட்ட ஆண்டுக்கு 3.37 ட்ரில்லியன் டாலர்கள் அளவிலான வர்த்தகம் நடக்கின்றது. அதுமட்டுமல்ல சீனா தனது எண்ணெய் இறக்குமதியை 80% தென்சீன கடல் மூலமாக கொண்டு செல்கின்றது.

இந்த தென்சீன கடலின் அடியில் இயற்கை எரிவாயு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மனிதர்களே வாழாத பல தீவுகள் இந்த தென்கடலில் உள்ளன. இந்த கேந்திரப் பகுதியினை சீனா – தாய்வான் மட்டுமல்லாது இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், புரூனை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளும் இந்தக் கடலை உரிமை கோருகின்றன. மனிதர்களே வாழாத பல தீவுகள் இந்த தென்கடலில் உள்ளன. அங்கு செயற்கைத் தீவுகள் உருவாக்கப்பட்டு சீனா கடற்படை தளங்களை அமைத்துள்ளது. இதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. தென் சீனக் கடலில் வியட்நாம் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள பாராசெல் போன்ற தீவுக்கூட்டங்களை குறிவைத்து சீனா ஆக்ரமிக்க எண்ணுகின்றது.

சீனாவின் அத்து மீறலை வியட்நாம் ஐநா மன்றத்தில் குற்றச்சாட்டாக தெரிவித்தது. ஒரு முறை வியட்நாம் மீன்பிடி படகுகள் மீது சீனா கப்பல் மோதி மூழ்கடிக்க வைத்தது பெரிய பிரச்சினை ஆனது. சீனா 25 தீவுத் திட்டுகளை, சில புவியியல் குறியீடுகளை சீன மொழியில் பேர் சூட்டியது பெரிய பிரச்சினை ஆனது. ஜப்பானும் சென்காக் என்று பெயர் சூட்டியதை சீனா ஆட்சேபணை தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்க கப்பல் ஏவுகணையோடு தென்சீன பகுதிக்கு நுழைந்த போது சீனா கடுமையாக கண்டித்தது. தென்சீனாவில் தன்னுடைய அத்துமீறலையும் உரிமை கோரலையும் சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு கொடுத்தும் அதை சீனா கண்டுக் கொள்ளாமல் நொண்டியாட்டம் ஆடி தன்னுடைய விருப்பத்திற்கேற்றவாறு தென்சீன கடலை நாசம் செய்து வருகிறது. எப்படி இந்துமகா சமுத்திரத்தில் இலங்கையை கையில் வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு விரோதமாக சீனா நுழைந்து பட்டுவழிச்சாலை, ஹம்மன்தோட்டா என செய்வது போல தென்சீனக் கடலிலும் உலக அமைதியை குலைக்கக் கூடிய அளவில் சீனா இறங்குகிறது என்றால் சீனா சர்வதேச அமைதியை நாசப்படுத்துகின்ற கோவிட் 19 கிருமியைப் போல தானே.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
04.05.2020

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons