கல்கி பவள விழா மலர் 2016
கல்கி பவள விழா மலர் கிடைக்கப் பெற்றேன். கனமான ஆழமான விசயங்கள் இருக்கும் என்று நினைத்து பக்கங்களை திருப்பும்போது இறுதியாக கோகுலம் என வேறு சில பக்கங்கள் நிரம்பியுள்ளன. அது முழுதும் கல்கி மலராக மலர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கல்கி 25 மற்றும் 50 ஆண்டு விழா மலர்கள் சிறப்பாக பாதுகாக்கக் கூடிய பொக்கிஷமாக திகழ்ந்தன. ஆனால் இந்த பவள விழா மலரில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதுதான் ஒரு 45 ஆண்டுகால வாசகன் என்ற முறையில் சொல்லிகொள்ள விரும்புகிறேன்.






