இயக்குனர் அமீர் வரலாற்றை திரிக்கக் கூடாது! – பத்திரிகையாளர் கல்கி ப்ரியன்
இயக்குனர் அமீர் வரலாற்றை திரிக்கக் கூடாது!
-பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் –
———————————————————
“பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிரபாகரன் அவர்களை மறைந்த ஜெ.அன்பழகன் தான் பிணையில் எடுத்து அவரது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க இடம் கொடுத்ததாக “ட்வீட் ” போட்டி இருக்கிறார் இயக்குனர் அமீர்.
அவருக்கு இந்த தகவலை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
மறைந்த அன்பழகன் பற்றி சிறப்பாக சொல்ல வேறு பல செய்திகள் இருக்கின்றன.அவர் எனக்கும் நண்பர் தான்.(அவர் மறைந்த சில நிமிடங்களில் இரண்டு செய்தி தொலைக்காட்சிகளில் அவரது சிறப்பு களை பதிவு செய்திருக்கிறேன்)
“ஜெ.அன்பழகன் அவர்களுக்கு பெருமை சேர்க்கிறேன்” என்ற பெயரில் உண்மைக்கு மாறான தகவல்களை அமீர் பதிவு செய்யக்கூடாது.
பிரபாகரன் – முகுந்தன் பாண்டிபஜார் மோதலையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளையும் அமீர் தெரிந்து கொள்ள வேண்டும்:
** நடந்த தேதி மே ஐந்து 1982
** பிரபாகரனுக்கு பிணை கிடைத்தது
ஆகஸ்ட் முதல் வாரம்
** திரு.பழ.நெடுமாறன், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் திரு.என்.டி.வானமாமலை பிரபாகரனுக்கு பிணை வாங்கிக் கொடுத்தார்.
** பிணை நிபந்தனை மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்பது.
** எனவே உடனடியாக மதுரை சென்று நெடுமாறனுக்கு சொந்தமான இடத்தில் தங்கி விட்டார் பிரபாகரன்.
நடந்தது இது தான். மறைந்த அன்பழகன் அவர்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளனாக நெடுமாறன் மற்றும் ராதாகிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததால் எனக்கு இந்த விவரங்கள் தெரியும்.
இன்னமும் சொல்லப்போனால் அந்த சமயத்தில் நெடுமாறன், ராதாகிருஷ்ணன்,புலமைப்பித்தன் இன்னமும் ஒன்றிரண்டு பிரமுகர்கள் தான் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தனர்.
எனவே அமீர் அவர்கள் வரலாற்றை திரிக்கக் கூடாது.
அமீர் போன்ற பிரபலங்கள் சொல்வதை மக்கள் நம்புவாரகள் எனபதாலேயே இந்த பதிவை போட வேண்டியது அவசியமாகிறது.
மற்றபடி மறைந்த அன்பழகன் மீது மிக்க மரியாதைஉண்டு
———————






