எஸ்.ஜே.வி.செல்வநாயகம்

0
மலேசியாவில் பிறந்த வேலுப்பிள்ளை #செல்வநாயகம் தமிழீழ விடுதலைக்காக அறவழியில் போராடிய பெருமைக்குரிய ஈழத் தமிழர்களின் தலைவர்.
அவர்90%இந்துவாக்காளர்களைக்
கொண்ட #காங்கேசன்துறை தொகுதியில் 1952 முதல் 1956 தவிர 1947 முதல் 1976 இல் இறக்கும் வரை 25 வருடங்கள் எம்.பி யாக இருந்த கிறிஸ்தவர். 1947, 1956, 1960 (மார்ச்), 1960 (ஜூலை),1965,1970 பொதுத்தேர்தல்கள் மற்றும் 1975 இடைத்தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்றார்.
”என்னைப்போற்றாதீர்கள், என் கொள்கைகளைப்போற்றுங்கள்” என்று கூறியவரும், 1976 இல்வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனித்தமிழீழத்தை பிரகடனப்படுத்தியவரும்,#ஈழத்துக்காந்தி என அழைக்கப்படுபவரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகருமான தந்தைசெல்வா(எஸ்.ஜே.வி.செல்வநாயகம் Q.C) அவர்களின் 115 ஆவது பிறந்த தினம் இன்று…

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons