Article 356- ஆட்சிகள் :

0
Article 356- ஆட்சிகள் :
————————–
நேற்றைக்கு முதல் நாள் (06.03.2017) பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்து 50 நாள் நிறைவானது. நேற்று இரவு டெல்லி, ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் பேராசிரியர் பாண்டே கைபேசியில் என்னை அழைத்திருந்தார். 
அவரோடு பல செய்திகளை பேசிக் கொண்டிருந்த போது, அண்ணா ஆட்சி அமைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை அப்போது சொன்னேன்.
பல அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் இந்தியாவில் பிரிவு 356 யை கொண்டு, மாநில அரசுகளை கலைக்கப்பட்டதும், உச்சநீதிமன்றத்தில், எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்புப் பின் 356யை பயன்படுத்துவதில் மத்திய அரசை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதை வரை 128 முறை 356 பிரயோகப்படுத்தி, மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. முதன் முதலாக பஞ்சாப்பில் டாக்டர் கோபி சண்ட் தலைமையிலான காங்கிரஸ் அரசு 16.06.1951-ல் கலைக்கப்பட்டது.
பெப்சு மாநில அரசு 1953-லும், ஆந்திர அரசு 15.11.1954லும்,  திருவாங்கூர் கொச்சின் அரசு, 1956-லும், காங்கிரஸ் இல்லாத நம்பூதிரிபாத் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியை 1959-ல் கலைக்கப்பட்டது. ஆனால், பல நம்பூதிரிபாத் அரசு தான் முதன் முதலாக 356க்கு பழிவாங்கப்பட்ட அரசாங்கம் என்று கருதுகின்றன.
1960களின் இறுதியிலேயே காங்கிரஸ் மேல் அதிருப்தி ஏற்பட்டு இந்தியாவில் எட்டுத்துக்கும் காங்கிரஸ் இல்லா மாநில அரசுகள் உருவாகின. 1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் இல்லா அரசை பேரறிஞர் அண்ணா அமைத்தார்.
மேற்கு வங்காளத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. வங்காள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. அஜாய் குமார் முகர்ஜி முதலமைச்சரானார்.
பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாப் ஐக்கிய முன்னணிக்கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. அகாலிதளத்தைச் சேர்ந்த சர்தார் குர்னாம்சிங் முதல்வரானார்.
பீகார் மாநிலத்தில் ஜனகிராந்திதள சேர்ந்த திரு. மகாமாயா பிரசாத் சின்ஹா முதலமைச்சரானார்.
1959-ல் கேரள மாநிலத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு. ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
ஒரிசா மாநிலத்தில் சுதந்திராக் கட்சியைச் சார்ந்த திரு. ஆர். என். சிங்தேவ் முதலமைச்சரானார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், 1967-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்டு திரு.சி.பி. குப்தா முதலமைச்சரானார். ஆனால் 18 நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டு திரு. சரண்சிங் முதலமைச்சரானார்.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில்லாமல் வேறு கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி உருவாகிய மாநிலங்களில் தொடர்ந்து அந்தந்தக் கட்சிகளின் ஆட்சிகள் நீடிக்க முடியவில்லை. இடையிலே சில கவிழ்ந்தன. சில கவிழ்க்கப்பட்டன.
 #art356
#காங்கிரஸ்
#அரசியல்நிகழ்வுகள்
#ஆட்சி
#ksrposts #ksradhakrishnanposts
K.S.Radhakrishnan
8/3/2017
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons