கன்னியாகுமரி

0
நாட்டின் தென் எல்லையான குமரிமுனை எப்போதும் ரம்மியமான சூழலை மனதிற்கு வழங்கும். சீர்காழி கோவிந்தராஜின் திரள்மேனி – நீலக்கடல் என்ற பாடலை கேட்கும்போது குமரிமுனையின் புவியியல் மனதில் வந்து போகும்.
இந்த இரு புகைப்படங்கள் குமரியின் உயிரோட்டமான வரலாற்றை சொல்கின்றது. தென் எல்லையில் உள்ள குமரித்தாயான பகவதி அம்மன் திருக்கோவில் கிழக்கு வாயில் எப்போதும் அடைத்து வைத்தே காணப்படும். இதற்கு காரணம் என்னவெனில், ஒரு இரவு பொழுதில் முக்கடல் சங்கமத்தில் குமரிமுனையையொட்டி ஒரு கப்பல் வந்ததாகவும், குமரிதாயின் கிழக்கு வாயில் வழியாக அம்மனின் மூக்குத்தி ஒளி பிரகாசித்ததாகவும், அந்த ஒளியை கண்டு கப்பலை ஓட்டிய மாலுமி கலங்கரை விளக்கம்தான் என்று நினைத்து கொண்டு குமரிதாயின் கிழக்கு வாயிலை நோக்கி கப்பலை ஓட்டியுள்ளார். இதனால் அக்கப்பல் பாறையில் மோதி உடைந்து மூழ்கி போனதாக ஒரு நம்பிக்கை.
இவ்வாறான நிகழ்வுக்கு பின் கிழக்கு வாசல் மூடப்பட்டது. தற்போது, வடக்கு வாசல் நுழைவாயிலாக நடைமுறையில் உள்ளது.
விவேகானந்தர் பாறையும், அய்யன் வள்ளுவர் சிலை அமைந்த பாறைகள்தான் அந்த பாறைகள் என்று சொல்லப்படுகிறது.
குமரிமுனை அருமையை இன்னும் பல தமிழர்கள் உணராமலும், அதை பார்க்காமலும் உள்ளனர் என்பது வேதனையான விடையம்.
பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு விருந்தினராக பேச சென்றபோது நம்மைவிட அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கன்னியாகுமரியை பற்றி விரிவாக சொல்லும் போது மகிழ்ச்சியாக இருந்தது. வடபுலத்தான் கன்னியாகுமரியை நேசிப்பதை விட நம் தமிழர்கள் குமரிமுனையை பற்றி அக்கரைக் கொள்வது குறைவே.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons