*#மொழிவாரி_மாநில_அமைப்பு #குறித்தான_சில_வரலாற்று_குறிப்புகள்*

0

————————————-
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய மண்ணை மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. காங்கிரஸ் கட்சியில் இதற்கு சிலர் மெளனம் காத்தனர். மதுசூதனன் தாசின் முயற்சியில் 1936ல் பீகார் மாநிலத்தில் இருந்த அன்றைய ஒரிசா மாநிலம் மொழிவாரியாக பிரிந்தது. 
திலகர் ஆரம்பத்திலேயே மொழிவரியான அமைப்பு நிர்வாகம் வேண்டும் என்று தான் விரும்பினார். அன்னிபெசண்டின் ஹோம் ரூல் அமைப்பும் இதை ஆதரித்தது. கே.எம்.முன்ஷியும், வி.கே.கிருஷ்ண மேனனும் இதனை எதிர்த்தனர். உத்தமர் காந்தி இதை அமல்படுத்தக் கூடிய நிலை இப்போது சரியாக இல்லை என்று தெரிவித்தார். காங்கிரசின் நாக்பூர் மாநாட்டில் 1920ல் மொழிவாரி மாநிலங்கள் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. அதன் பின் மோதிலால் நேருவும் ஆசாத் குழுவும் 1928ல் மொழிவாரி மாநிலங்கள் தான் அமைய வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கினர். நாடு விடுதலைப் பெற்ற பின் 1948ல் அலாஹாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓய்வுப் பெற்ற நீதிபதி எஸ்.கே. தாஸ் தலைமையில் அமைந்த குழு மொழிவாரி மாநிலம் அமைவதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற தார் குழுவின் அறிக்கையை வழங்கியது. 
ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாடு நாட்டின் விடுதலைக்குப் பின் விவாதித்தது. அதன் பயனாக பண்டித நேரு, படேல், காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு 60 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதையொட்டி ஆந்திரத்தில் பெரிய கலவரம் நடந்தது. 1953 அக்டோபரில் 16 மாவட்டங்கள் சென்னை ராஜ்தானியில் இருந்து பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவானது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இதுகுறித்தான கடுமையான விவாதங்கள் நடந்ததன் விளைவாக ஓய்வுப் பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பசல் அலி தலைமையில் எச். என். குன்ஸரூ, கே. எம். பணிக்கர் ஆகியோர் கொண்ட குழு மொழிவாரி மாநிலங்கள் பற்றி ஆராய அமைக்கப்பட்டது. அன்றைய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் கண்காணிப்பில் இதுகுறித்தான ஆய்வுகள் நடந்தன. பசல் அலி குழுவின் அறிக்கை 1955 செப்டம்பர் 30ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் மொழிவாரியாக மாநில சீரமைப்பு சட்டம்1956 ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு நவம்பர் 1ஆம் தேதி சென்னை மாகாணம் அமைந்தது. இந்த நிலையில் தமிழகம் பல பகுதிகளை இழந்து திருத்தணி, கன்னியாகுமரி மாவட்டம், திருநல்வேலி மாவட்டம் செங்கோட்டை மட்டுமே பெற்றோம். 
அன்றைய டெல்லி செள்த் பிளாக் பிரதமர் அலுவலகத்தில் கிருஷ்ண மேனன் போன்ற மலையாளிகளுடைய ஆளுமையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயங்கள் மறுக்கப் பட்டது தான் உண்மை.
#மொழிவாரிமாநிலங்கள்
#தமிழ்நாடு
#ksrposting
#ksradhakrishnanposting
1-11-2019.
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons