ஈழத்தமிழர் பிரச்சனை
ஈழத்தமிழர் பிரச்சனை-ஐநா மனித உரிமைகள் பேரவை:
———————————–
ஐநா மனித உரிமைகள் பேரவையில் புதிய உட்புகுத்தல்கள் இன்றி 2015 தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் கலப்புநீதிமன்றபொறிமுறை ஏற்படுத்த வேண்டும் என்ற வாசகத்தை தீர்மான வரைவிலிருந்து நீக்க இலங்கை முயன்ற போதும் அது சாத்தியப்படவில்லை.
ஆனல்,ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன்” என்று சம்பந்தப்பட்ட அரசாங்கம் தெளிவாகச் சொல்லிவிட்ட நிலையில், அதே தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குக் கால அவகாசத்தை அந்த அரசாங்கத்திற்கு ஐநா சபை வழங்கின்றது ….
60ஆண்டுகளாக பேசியும்,போராட்டம் என பார்த்தாகி விட்டது தமிழர்களுக்கு நீதி என்பது இலங்கை அரசால் கிடைக்கவே கிடைக்காது என்பது அனுபவ பூர்வமாக உணர்ந்தபின் தான் தமீழீழம் கோரிக்கை போராட்டம் எழுந்தது …..
#ஐநாமனிதஉரிமைகள்பேரவை
#ஈழத்தமிழர்பிரச்சனை
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
14.03.2017