இந்த வரிகள் கவனத்தை ஈர்த்தது

0
இந்த வரிகள் கவனத்தை 
ஈர்த்தது:
————————————
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் ? அதாவது பொது வாழ்க்கை   என்று வந்துவிட்ட ஒரு சாதா அரசியல் வாதி கூட  கண்களில் மிளிரும் அறிவோடு ,   கம்பீரமாக, கொஞ்சம் அதிகார தொனியுடன்  இருக்கவேண்டும் .அதே சமயம் பொது மக்களிடம் பழகும் பொழுது உள்ளார்ந்த வாஞ்சையோடும்  ,  உதிர்க்கும் சொல்லில் நம்பக தன்மை கலந்தும்  இருக்க வேண்டும் . சட்ட மனற உறுப்பினர்கள் என்று ஆகிவிட்டால்  தனது தொகுதி மக்களின் நலன் சார்ந்த விஷயம் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . எதன் மீதும் பற்றில்லாத அதே சமயம் மக்களிடம் செல்வாக்கு உள்ள எவரையும் ஆட்டு மந்தையைப்போன்று  நடத்த முடியாது .ஒரு நேர்மையான அரசியல்வாதியிடம் அதன் தலைமை கட்டளை இட முடியாது கோரிக்கை தான் வைக்க வேண்டும். அந்த கோரிக்கை கூட சொல்ல  அஞ்ச வேண்டும். அப்படி இருக்க  வேண்டும் அந்த அரசியல்வாதியின் குணாதிசயம் . 
 இத்தகைய  குணம் உடையவர்களை நாம் தேர்ந்தெடுக்க தவறி விடுகிறோம் . படித்த,  விஷயம் தெரிந்த மக்களை விட பாமர மக்களின் ஒட்டு வங்கிகளை குறி வைத்து எப்படியோ ஓட்டுகள் வாங்கி விடுகிறார்கள் இந்த  காம சோமா அரசியல்வாதிகள் . மொத்த மாநிலமும் படித்து முன்னேறி , வேலை வாய்ப்பு, தொழில் என்று பன்முகத்தன்மையோடு சுயமாக நிற்கும் நிலை  சிறந்தால் மட்டுமே  இது போல இல்லாமல் நல்ல  தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாம் . சின்ன சின்ன விஷயங்களையும் அது நியாயமாக இல்லாத பட்ஷத்தில்  நாம் எதிர்க்க வேண்டும் .பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியோ அல்லது நமக்கு எதற்கு இந்த வேலை என்று எண்ணியோ  இருந்தோமானால் அதன் பாதிப்பு  மிக மோசமாக இருக்கும்.
அரசியல் வேறு ஓட்டு வங்கி அரசியல்,வணிக அரசியல் என்பது வேறு. இன்றைக்கு அரசியல் இல்லாத வணிக – பணம், குறுகிய நோக்க அரசியல் நடக்கின்றது.
இது ஒரு வகை வணிக தந்திரம்.அரசியல் அல்ல ஆட்சியல்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்  ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் அடுத்த பத்து வருடத்தில் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும். படித்த இளைஞர்கள்  அனைவரும் முன்பு போல் இல்லாமல்  அரசியலை நன்றாக புரிந்துக்கொண்டுள்ளனர் . இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது . விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நீர் நிலை பாதுகாத்தல் ஆகிய  விஷயங்களுக்கு பொது மக்கள் கூட்டாக சேர்ந்து மிக முக்கிய இந்த இரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் . இது விரைவில்  நடக்க வேண்டும் .ஏனெனில் ஒரு மாநிலத்தில் முழு வளர்ச்சி இந்த இரண்டோடு பின்னி பிணைந்துள்ளது .
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
15.03.2017
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons