தினமலர்_பார்வைக்கு…

0
#தினமலர்_பார்வைக்கு…
———————————-
#தமிழ்நாடு_உருவான_தினமான நேற்று, நவ1அன்றைய சென்னை மாகாணம் (இன்றைய தமிழ்நாடு) எல்லைகள் அமைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தன.
தினமலர்  நிறுவனர்  மறைந்த #ராமசுப்பையர் தெற்கெல்லைப் போராட்ட குமரிமாவட்ட இணைப்பில் முக்கிய பங்களிப்பு செய்தார். அப்போது நடைபெற்ற மார்த்தாண்டம் புதுக்கடை துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் இறந்தனர்.
இதனால்  குமரி மாவட்டத்தில் கடுமையான  பிரச்சினைகளும் போராட்டங்களும்  உருவாகின. தினமலர் ஏடு முதன் முதலாக திருவனந்தபுரத்தில், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையால் துவக்கப்பட்டது. பின்னாட்களில் தினமலர் நெல்லைக்கு மாற்றப்பட்டு, தச்சநல்லூர் அருகே ரயில்வே கேட் அருகே உள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்தது. அந்தக் கட்டத்தில் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய வேண்டும் என்பது தினமலரின் நோக்கமும் அணுகுமுறையுமாக இருந்தது.
இதற்காக ராமசுப்பையர் தன்னால் இயன்ற பணிகளைச் செய்தார். அப்போது அன்றைய தமிழக அமைச்சர் பக்தவச்சலத்தை அழைத்துச் சென்று குமரி மாவட்ட போராட்டக்காரர்களிடம் பேச வைத்தார் ராமசுப்பையர் .இந்தச் சந்திப்பு திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே தென்புறம் உள்ள அரசினர் விடுதியில் நடந்தது. இப்படி எல்லாம் பல வகையில் ராமசுப்பையர் தெற்கெல்லைப் போராட்டத்தை முன்னெடுத்தவர். இந்த நினைவுகள் தொடர்பாக தினமலரில் ‘நினைவு கூறுங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட, தினமலர் நிர்வாகத்திற்கு சொல்லி அனுப்பி இருந்தேன். ஆனால் தினமலர் நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது. தினமலரின் பெருமையைச் சொல்லும் விதமான இந்தச் செய்தியை வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#tamilnadu
#ksrpost
#ksradhakrishnanposting
2-11-2019.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons