காவிரிப் பிரச்சனை – சிவசமுத்திரம் நீர்மின் திட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது.

0
கர்நாடக மாநிலத்தின் சிவசமுத்திர நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை கோரி கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சனைக்குத் தீர்வு எட்டாமல் இருக்கிறது. இப்போதும் பிரச்சனையில் உள்ள நிலையில் சிவசமுத்திர நீர்மின் திட்டத்தை அமைப்பது நல்லதல்ல.

இதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீரின் அளவும் காவிரியில் குறையும். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. இதே திட்டத்திற்கு 1988ஆம் ஆண்டு கர்நாடகம் கோரிக்கை வைத்தபோது மத்திய அரசு அதை நிராகரித்தது.

அதுபோல, காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு எட்டாத நிலையில் சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

#காவிரிப்_பிரச்சனை
#சிவசமுத்திர_நீர்மின்_திட்டம்
#cauvery_issue
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-12-2017

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons