தந்தை பெரியார்

0


தந்தை பெரியார் கொள்கையிலிருந்து மாறுபட்டு பேசுவது வேறு விடயம். ஆனால், அவரை களங்கப்படுத்துவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்த பதவியையும் நாடாமல், சமுதாயச் சீர்திருத்தம் என்ற நோக்கில் திராவிட இயக்கத்தைக் கட்டியெழுப்பிய தந்தை பெரியார் ஆற்றிய பணிகளை மறக்கமுடியாது. திடீரென சிலர் பெரியாரை விமர்சிபது தாங்கள் எங்கே நிற்கின்றோம் நமக்கென்ன தகுதி என்பதை எடைபோட்டுவிட்டு பேசுவதுதான் ஆரோக்கிய அரசியல்.

சிலர் பெரியாரை ஏற்கவில்லை என்பது உண்மைதான். அதற்காக, வரலாற்றினால் ஏற்கப்பட்ட மனிதரின் மாண்பை அவதூறு செய்வதை சகிக்க முடியாது.

சாக்ரட்டீஸையும் விமர்சித்தார்கள் இல்லையென்று சொல்லவில்லை.ராஜாராம் மோகன்ராய் மீது பழிச்சொல் வங்கத்தில் சுமத்தினார்கள். மகாகவி பாரதி உயிருடன் இருக்கும் பொழுது அவரைப் பைத்தியம் என்றும் அவர் ஆளுமையைத் தெரியாமல் சொன்னார்கள். இப்படி வரலாற்று ரீதியாக எவ்வளவோ சம்பவங்களைச் சொல்லலாம்.

‪#‎தந்தைபெரியார்‬ கல்லடிகள் சொல்லடிகள் பட்டு வயதான காலத்திலும் எந்த அரசியல் பலாபலனையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய பேச்சாலும் எழுத்தாலும் மக்களைத் தட்டி எழுப்பிய வரலாற்றை மறைத்துப் பேசுவது கண்டனத்துக்கும் கவலைக்கும் உரியது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-05-2015.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons