அண்ணாசிலை
இந்த அரிய படம் 1967 இறுதி காலகட்டங்களில், தி.மு.க ஆட்சிக்கு வந்து பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபொழுது எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம். இந்தப் படத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவும், அவருடைய மார்பளவு சிலையும், அவருடைய புகைப்படமும் அண்ணா சிலை செய்வதற்காக பணிகள் நடந்தபோது எடுத்து படம். அண்ணாவின் சிலையை அமைக்க முதலில் அண்ணா இசைவு தரவில்லை. நான் நாற்காலியில் அமர்ந்து போஸ் கொடுத்து சிலை செய்ய வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். தலைவர் கலைஞரும், எம்.ஜி.ஆரும், நாவலரும் அவரை வற்புறுத்தி அழைத்து வந்தார்கள். இது அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தச் சிலைக்கான முழுச்செலவையும் எம்.ஜி.ஆரே ஏற்றுக் கொண்டார். அந்தச் சிலைதான் இன்றைக்கு அண்ணாசாலையில்,வாலாஜ சாலை சந்திப்பில் இருக்கும் சிலையாகும். இந்தச் சிலையை சென்னை பல்கலைக்ககழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.எல். முதலியார் திறந்து வைத்தார். இதைக் குறித்து விகடன் பத்திரிகையிலிருந்து அதன் செய்தியாளர் அஸ்வினி விளக்கம் கேட்டபோது இதுகுறித்து இந்த விவரத்தினை அவரிடம் தெரிவித்தேன்.
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*
30-12-2017