யார் யாருக்கோ ஞானபீடமா?

0
மூத்த படைப்பாளி
கி.ரா வின் நினைவு கூட உங்களுக்கு வரவில்லையா??
தமிழக படைப்பாளிகள் அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இருவர் மட்டுமே ஞானபீடம்
பெற்றுள்ளனர்.
கிராவுக்கு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது. கிராவின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளில்
மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. எல்லாரும் எதிர்பார்த்த ஞானபீடம் தமிழுக்கு
கிடைக்கவில்லை என்று அனைவரையும் வேதனைபடுத்தி

ள்ளது .
ஞானபீட விருது 1965ல் இருந்து ஜெயின் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பு இந்தியாவின் பல்வேறு
மொழிகளில் உள்ள இலக்கியப்படைப்புகளில் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியில்
உள்ள சிறந்த படைப்பாளிக்கு விருதினை வழங்கி வருகிறது.

வங்கமொழிக்கு 6 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாள மொழிக்கு
5 முறையும், தெலுங்கிற்கு 3 முறைக்கு மேலும்
ஞானபீட விருதுகள் வழங்கபட்டுள்ளன.
 கடந்த 12 ஆண்டுகளில்,தமிழ் இலக்கிய
படைப்புகளுக்கு ஒரு முறைகூட வழங்காமல் ஞானபீடம் புறக்கணித்து விட்டது. தமிழ்
இலக்கிய கர்த்தாக்களுக்கு இந்த ஆண்டும் வழங்காமல் வங்க மொழி கவிஞர் ஷங்கா கோஷ் என்பவருக்கு
வழங்கப்பட்டுள்ளது
.
தமிழ்
படைப்பாளிகளான அகிலன்
, ஜெயகாந்தனுக்கு
பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை. நா.பார்த்சாரதிக்கு
1987ல் கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும்  அவர் மரணம் அடைந்துவிட்டதால்
அந்த வாய்ப்பும் தவறிவிட்டது. ஏனெனில் ஞானபீட விருது மறைந்தவர்களுக்கு கொடுப்ப
தில்லை.
விருதுகள் பெறுபவர்களால் பெருமைப்படும். தவிர விருதுகள் என்றுமே படைப்பாளிகளுக்கு பெருமை சேர்ப்பது அல்ல.
கி.ரா போன்ற இலக்கிய ஆளுமைகள் இந்த
மண்ணில் இருக்கிறார்
கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

#ஞானபீடம் 
#கி_ராஜநாராயணன்
#தமிழ்_இலக்கியம்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
#KSRPostings
#KSRadhakrishnanpostings

30-12-2017
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons