கோட்டபய_ராஜபக்சே #அநுராதபுரம் #_எல்லாளனிடமிருந்து_துட்டகம்மன் #அபகரித்ததை_துயர_நினைவு_கூர்வது போல உள்ளது.

0
#கோட்டபய_ராஜபக்சே #அநுராதபுரம்
#_எல்லாளனிடமிருந்து_துட்டகம்மன் #அபகரித்ததை_துயர_நினைவு_கூர்வது போல உள்ளது. 
————————————————-
அநுராதபுரத்தை எல்லாளன் என்ற தமிழ் அரசன் ஆண்டு வந்தான். துட்டகம்மன் எல்லாளனிடமிருந்து அதை பறித்து ஆட்சி நடத்தி வந்ததாக வரலாறு. அன்று நடந்தது தான் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. அநுராதபுரம் தமிழர்களின் ஆதி கேந்திரநகரம்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்கும் கோட்டபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றுக் கொள்ள அநுராதபுரத்தை தேர்ந்தெடுத்திருப்பதன் நோக்கம் இலங்கை தமிழர்களுக்கு எந்த மாதிரியான செய்தியினை சொல்கிறது என்பது இப்போதே- துவகத்திலே தெளிவாக தெரிகிறது.
நல்லிணக்கத்தை காட்ட வேண்டிய இடத்தில் இதுபோன்ற செயல்கள் ஏற்புடையதல்லவே.யாழ்ப்பாணாத்தலோ
திரிகோணமலையிலோ அல்லது மட்டக்களப்பிலோ அவருடைய பதவியேற்பு நடப்பதாக இருந்தால் பிரச்சினை எதுவும் இல்லை. 
ஆனால் அநுராதபுரத்தை தீர்க்கமாக தேர்ந்தெடுத்திருப்பது எல்லாளனிடமிருந்து  துட்டகம்மன் அபகரித்ததை துயர நினைவு கூர்வது போல உள்ளது. மேலும் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல நடந்துக் கொள்வதை தவிர்க்கலாம்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.11.2019
#ksrposts
#ksrpostings
#srilanka_elections
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons