பெரிய சாமி தூரன் குழு தமிழ் கலைக்களஞ்சியம்

0
பெரிய சாமி  தூரன் குழு தமிழ் கலைக்களஞ்சியம் :
————————————-
அன்றைய சென்னை மாகான அரசு, 1954-ல் பெரிய சாமி  தூரன் தலைமையில் தமிழில் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் குழுவை அமைத்தது. தமிழ் வளர்ச்சி கழகம் என்ற பெயரில்  சென்னைப்
பல்கலைக்கழகத்தில் அலுவலகம் அமைத்து பலத் தொகுப்புகளாக தமிழ் கலைக்களஞ்சியம் வெளிவந்தது. அது மாதிரி தமிழ் கலைக்களஞ்சியம் பார்க்க முடியாது. இது தமிழுக்குக் கிடைத்த அருட்கொடை. அதன் மறுபதிப்பு இல்லாமல் போய்விட்டது. எத்தனையோ தமிழ் கலைக்களஞ்சியம் வந்தாலும், தூரன் குழு தயாரித்த கலைக்களஞ்சியம் மாதிரி இல்லை.
பெரியசாமி தூரன் காலத்தில் தமிழக அரசு வழங்கிய அபரிமித உதவியினால்தான், அவரால் அத்தனை தொகுதிகளையும் முழுமைபெறச் செய்ய முடிந்தது. அத்தகைய ஆதரவு தற்போது இல்லாததாலேயே, தமிழ்ப் பல்கலைக்கழகத் தொகுதிகள் தேங்கிப் போயிருக்கின்றன. .
1954 – 1968 காலகட்டத்தில் வெளியான ‘தமிழ் கலைக்களஞ்சியமோ’, 1968 – 1976 காலகட்டத்தில் வெளியான ‘குழந்தைகள் கலைக்களஞ்சியமோ’ அதன்பின் திருத்தங்களோ, மேம்படுத்துதல்களோ இன்றி அப்படியே உள்ளன.
ஒரே ஒரு நல்ல செய்தி, இவ்விரு கலைக்களஞ்சியங்களும் தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வலைதளத்தில் முழுமையாகப் படிக்கக் கிடைக்கின்றன என்பதுதான். எண்ணற்ற தனி நபர்கள், தம் தணியாத ஆர்வம் காரணமாக பல்வேறு கலைக்களஞ்சியங்களைத் தொகுத்துள்ளனர். ஆர்வம் மட்டுமே நம்பகத் தன்மையை உருவாக்கப் போதுமானதல்ல.
#கலைக்களஞ்சியம்
#Ksrpost 
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2017
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons