#அம்மன்_தோட்டா_துறைமுகம்#இந்துமகா_சமுத்திரம்.
#இலங்கை
#சீனா
————————————
இலங்கை,ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் தமிழர்களை அழித்த கோத்தபய அதிபராக வெற்றி பெற்று இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி 13 ஆவது சட்டத்திருத் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்ட உரிமைகளை தமிழர்களுக்கு வழங்குங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார் என்ற தகவல்.
இந்த 13ஆவது சட்டத்திருத்தம் என்னவென்றால் ராஜீவ் காந்தி காலத்தில் ஜெயவர்த்தனே இலங்கை அதிபராக இருந்தபோது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தான். அந்த உறுதிமொழிகள் எந்த அளவு தமிழர்களுடைய வாழ்வில் அமைதியை ஏற்படுத்தும் என்பது அப்போதே சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
அதன்பின்  எல் எல் ஆர் சி ( LLRC) என்று சொல்லப்பட்ட நல்லிணக்க அறிக்கையையும் ராஜபக்சே அப்போதே புறம் தள்ளினார். ஐநா மனித உரிமை ஆணையத்தில் இது குறித்தான தீர்மானங்கள் 
2012ல் இருந்து எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கோத்தபய டெல்லியில் இருக்கும்போது பொழுது ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் சீனாவுக்கு இலங்கையின் தென் முனையில் உள்ள அம்மன் தோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்கியதை நடைமுறைப்படுத்த இயலாது என்றும் அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய போகினறோம் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
அம்மன் தோட்டா துறைமுகம் ராஜபக்சே காலத்திலேயே இலங்கைக்கு வழங்கப்பட்டது அதற்கு ஈடாக ராஜபக்சே சீனாவிடம் கடன் பெற்றார்.
ராஜபக்சே ஆட்சி முடிந்தவுடன் ரணில் ஆட்சி காலத்தில் 1.1 பில்லியன் டாலர்கள் சைனா மெர்சன்டஸ் போர்ட் ஹோல்டிங் கம்பெனி (China merchants port Holding company)என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு ரணில் அம்மன் தோட்டாவை 99 வருடம் இலங்கை குத்தகைக்கு வழங்க உத்தரவிட்டார்.
இவையெல்லாம் நடந்தது 2017 – 18 காலகட்டங்களில். அம்மன் தோட்டா துறைமுகம் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்ததால் இந்து மகா சமுத்திரத்தில் திரிகோணமலை கேந்திர பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
சீனாவின் தென்கடல், மியான்மர், இந்து மகா சமுத்திரம், அம்மன் தோட்டா துறைமுகம் வழியாக ஆப்ரிக்கா, கென்யா, தென் அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தன்னுடைய பட்டு வழிப்பாதையை (Silk road-belt and road) சீனா தனது ஆதிபத்தியத்தை நிறுவியது.
இந்தநிலையில் 99 வருட குத்தகை மறுபரிசீலனை செய்யப்படும் என்ற இலங்கையின் அறிவிப்பினால் சீனாவின்  நடவடிக்கை எத்தகையதாக இருக்கும் என்பது தெரியவில்லை. இந்த சீனா 99 வருட அம்மன் தோட்டா ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என்று தன் கருத்தை சொல்வதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்தியாவுக்கு இது ஒரு மகிழ்ச்சியான இந்துமகா சமுத்திரத்தில் அமைதியை நிலைநாட்ட இது ஒரு சின்ன தொடக்கமாக இருக்கலாம்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
29.11.2019
#ksrpostings
#ksradhakrishnanposts
#அம்மன்_தோட்டா_துறைமுகம்
#இலங்கை
#சீனா
https://www.bloomberg.com/news/articles/2019-11-28/sri-lanka-seeks-to-undo-1-1-billion-deal-to-lease-port-to-china

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons